12ம் நூற்றாண்டு வாள் வீரன் நடுகல்; திண்டுக்கல் அருகே கண்டெடுப்பு

Added : மே 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திண்டுக்கல்,--திண்டுக்கல் சிலுவத்துாரில் 12 ம் நுாற்றாண்டை சேர்ந்த வாள் வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர், வரலாறு மாணவர் ரத்தினமுரளிதர் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: அம்மாபட்டியை சேர்ந்த கோபால் சிலுவத்துாரில் வாள்வீரன் நடுகல் இருப்பதாக கூறினார். சென்று பார்த்தபோது உயரம் 4 அடி, அகலம் 3 அடியுடன் அரை
12ம் நூற்றாண்டு வாள் வீரன் நடுகல்; திண்டுக்கல் அருகே  கண்டெடுப்பு

திண்டுக்கல்,--திண்டுக்கல் சிலுவத்துாரில் 12 ம் நுாற்றாண்டை சேர்ந்த வாள் வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர், வரலாறு மாணவர் ரத்தினமுரளிதர் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: அம்மாபட்டியை சேர்ந்த கோபால் சிலுவத்துாரில் வாள்வீரன் நடுகல் இருப்பதாக கூறினார். சென்று பார்த்தபோது உயரம் 4 அடி, அகலம் 3 அடியுடன் அரை அடி தடிமனும் கொண்ட நடுகல் இருந்தது. வீரனின் வலது கை வாளை நீட்டி பிடித்தபடியும், இடது கை வாளுக்கு இணையாக கையை நீட்டியபடி உள்ளது.வீரனின் இடையில் இடைவாரில் இருந்து குறுவாள் தொங்கியபடியும், இடுப்பில் இருந்து முழங்கால் வரை இடைகச்சு ஆடையும், ஆடையை சுற்றி 'உதரபந்தம்' எனும் இடைசுற்று ஆடையும் உள்ளது.

தோளில் லாகு வளையம், காலில் தண்டை ,கழுத்தில் வீர சங்கிலி உள்ளது. இவ்வீரனின் செய்கை போர்களத்தில் முன் நின்று எதிரி வீரர்கள் வேகத்தை தடுப்பவராக இருக்கிறது. இந்த நடுகல்லை இங்குள்ள மக்கள் 'கள்ளப்பன்' எனும் இறைவனாக வழிபடுகின்றனர். ஆடை, சிலை அமைப்பு 12 ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக உள்ளது.




பாண்டியர் கால கோயில்

வாள் வீரன் நடுகல்லில் இருந்து 3 கி.மீ., தொலைவில் தோட்டனுாத்தில் பெரிய குளத்தின் நடுவில் ஒரு நடுகல் உள்ளது. அதில் ஆண், பெண் உருவமும், இரு ஓரங்களிலும் சிறுவர், சிறுமியர் உருவமும் உள்ளது. இந்த நடுகல்லில் இருந்து சிறிது தொலைவில் பிற்கால பாண்டியர் கட்டிய சிவன் கோயில் உள்ளது. நடுகல்லில் இருப்பவர்கள் கோயிலை கட்டிய கொடையாளர்கள். இதுவும் 12ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் ஆகும், என்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிட மாயை - Paris,பிரான்ஸ்
27-மே-202204:48:12 IST Report Abuse
திராவிட மாயை இது பத்தி எங்க கால்டுவெல் ஒண்ணுமே சொல்லவில்லை அதனால் இவர்களும் ஆரிய கூட்டமா இருப்பாங்களா?
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
27-மே-202204:11:42 IST Report Abuse
Fastrack சொல்லிவெச்ச மாதிரி இவுங்க ஆட்சியில எப்படி வெளியே வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X