அக்னி வெயில் நாளை முடிவு: 10 இடத்தில் வெப்பம் சதம்

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை,--அக்னி நட்சத்திரமான கத்திரி வெயில் காலம், தமிழகத்தில் நாளையுடன் முடிகிறது. சென்னை, புதுச்சேரி உட்பட 10 இடங்களில், நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில், கோடையின் முக்கிய வெயில் காலமான அக்னி நட்சத்திரம், மே 4ல் துவங்கியது. அப்போது, சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மிதமான வெப்பநிலை பதிவானது. அதேநேரம், மத்திய மாவட்டங்கள் மற்றும் கடலோர

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை,--அக்னி நட்சத்திரமான கத்திரி வெயில் காலம், தமிழகத்தில் நாளையுடன் முடிகிறது. சென்னை, புதுச்சேரி உட்பட 10 இடங்களில், நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.



latest tamil news



தமிழகத்தில், கோடையின் முக்கிய வெயில் காலமான அக்னி நட்சத்திரம், மே 4ல் துவங்கியது. அப்போது, சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மிதமான வெப்பநிலை பதிவானது. அதேநேரம், மத்திய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், வெயில் தீவிரம் காட்டியது.

இதன்பின், தென் மேற்கு பருவமழை காலம் அந்தமானில் துவங்கியதால், தென் மாவட்டங்களில் வெப்பம் குறைந்து, பருவ காற்று வீசியதால், வெப்பத்தின் அளவு சற்று தணிந்தது.அதேநேரம், சென்னை, காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், வெயில் உக்கிரம் காட்ட துவங்கியது.


latest tamil news



சென்னையில் நேற்று நான்காம் நாளாக, 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியசை தாண்டி வெப்பநிலை பதிவானது. நேற்று, மாநிலத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

கடலுார், 40; சென்னை மீனம்பாக்கம், திருச்சி, வேலுார், 39; சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், திருத்தணி மற்றும் புதுச்சேரியில், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.இந்நிலையில், அக்னி நட்சத்திர வெயில் காலம் நாளையுடன் முடிகிறது. அதனால், வெயிலின் அளவு குறையும் என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N S Sankaran - Chennai,இந்தியா
27-மே-202210:44:54 IST Report Abuse
N S Sankaran சென்னை வாசிகள் ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம். கேரளா, கர்நாடகாவில் மழை ஆரம்பித்த பின் இங்கே வெயில் மேலும் உக்கிரமாக இருக்கும் என்பது கடந்த காலங்களின் அனுபவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X