கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லானத்தம் நாச்சியம்மன் கோவில் பின்புறம், சாராயம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன்,45; என்பவரை கைது செய்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம்
அரசம்பட்டு கிராமத்தில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சாராய சோதனை மேற்கொண்டார். அப்போது சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த சின்னப்பிள்ளை, 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.