சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும், குறைந்த நேரத்தில், சொகுசு பயணம் என்ற அடிப்படையிலும் துவக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில், தற்போது, சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை; பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சேவையை, மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் முழுதும், முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஐந்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டம் வகுக்கப்பட்டு, முழு வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளை 2026ம் ஆண்டுக்குள் முடிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில், ௨௦௧௫ல் மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
ஆரம்பத்தில், ஆலந்துார் - கோயம்பேடு வரை மட்டும் வழங்கப்பட்ட சேவை, பின், படிப்படியாக நீட்டிக்கப்பட்டு, தற்போது, விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே இரு வழித்தடங்களில், மொத்தம், 54 கி.மீ., பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த இரண்டு பாதைகளிலும் 40 நிலையங்கள் உள்ளன, சுரங்கத்தில் 20; தரைக்கு மேல் 20 நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
இருவழிப்பாதைக்கும் இணைப்பு நிலையங்களாக, ஆலந்துார், சென்ட்ரல் மெட்ரோ நிலையங்கள் உள்ளன. சென்ட்ரல் மெட்ரோ நிலையம், தரைக்கு கீழ் மூன்று தளங்களுடன், ஆசியாவிலேயே சுரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பெரிய மெட்ரோ நிலையமாக திகழ்கிறது. தற்போது மெட்ரோ ரயிலில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை, சராசரியாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மேலும் மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட மெட்ரோ பாதை திட்ட பணிகள், 2026க்கும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணி முடிந்தால், ஐந்து வழித்தடங்களிலும், 173.2 கி.மீ., துாரம் மெட்ரோ பாதையில் ரயில்கள் இயக்கப்படும். மொத்தம் 168 நிலையங்கள் வழியாக, தினமும், 10 லட்சம் பயணியருக்கு மேல் பயணிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மெட்ரோ ரயில் முதல் திட்ட நீட்டிப்பு திட்டத்தில், விமான நிலையம் - கிளாம்பாக்கம்புதிய பஸ் நிலையம் இடையே, 15.3 கி.மீ., மெட்ரோ பாதை அமைப்பதற்கு, வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் மெட்ரோ பாதைக்கும், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ பாதைக்கும் இணைப்பு நிலையமாக, மயிலாப்பூர் அமைகிறது. இந்நிலையம், சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தை போல், 114 அடி ஆழத்திலும், ௯௯ அடி அகலத்திலும், 492 அடி நீளத்திலும், தரைக்கு கீழ் நான்கு அடுக்கு மெட்ரோ நிலையமாக அமைகிறது. தரைக்கு கீழ் முதல் தளத்தில், பயணியர் நடமாடும் பகுதி, டிக்கெட் கவுன்டர்கள் இருக்கும். மற்ற மூன்று தளங்களிலும், ரயில் நிலையங்கள் அமைகின்றன.
l மூன்றாவது வழித்தடம்: மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., l நான்காவது வழித்தடம் : மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே, 47 கி.மீ., l ஐந்தாவது வழித்தடம்: பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகின்றனl மாதவரம் - சிறுசேரி சிப்காட் மெட்ரோ பாதையில், 50 நிலையங்கள் அமைகின்றன. 20 நிலையங்கள் தரைக்கு மேலும், 30 நிலையங்கள் சுரங்கத்திலும் அமைகின்றனl பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே, ௩௦ நிலையங்கள் அமைகின்றன. 18 நிலையங்கள் தரைக்கு மேலும், 12 நிலையங்கள் சுரங்கத்திலும் கட்டப்பட உள்ளனl மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே ௪௮ நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ௪௨ நிலையங்கள் தரைக்கு மேலும், ஆறு நிலையங்கள் சுரங்கத்திலும் அமைகின்றனl மாதவரம் - சோழிங்கநல்லுார் பாதையும், மாதவரம் - சிப்காட் மெட்ரோ பாதையும், சோழிங்கநல்லுார் நிலையத்தில் இணைகின்றன.
- நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE