கடலூர் மாவட்டத்தில் நேற்று வெயில்.உச்சம் :அனல் காற்று வீசுவதால் மக்கள் தவிப்பு| Dinamalar

கடலூர் மாவட்டத்தில் நேற்று வெயில்.உச்சம் :அனல் காற்று வீசுவதால் மக்கள் தவிப்பு

Added : மே 27, 2022 | |
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் வெயில் சதமடித்து வரும் நிலையில் நேற்று 104.2 டிகிரி பதிவானதால், மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.கோடை துவங்கியதில் இருந்தே தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலுார், திருத்தணி, துாத்துக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயில் சதமடித்து வருகிறது.கடலுார்
கடலூர் மாவட்டத்தில் நேற்று வெயில்.உச்சம் :அனல் காற்று வீசுவதால் மக்கள் தவிப்பு

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் வெயில் சதமடித்து வரும் நிலையில் நேற்று 104.2 டிகிரி பதிவானதால், மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
கோடை துவங்கியதில் இருந்தே தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலுார், திருத்தணி, துாத்துக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயில் சதமடித்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் வெயில் அடித்தாலும், மே, ஜூன் மாதங்களில் உச்சக் கட்ட வெயில் மக்களை வாட்டி வதைப்பது வழக்கம்.
மார்ச் மாதத்தில் அதிகரிக்க துவங்கும் வெப்பம், ஜூலை மாதத்துக்கு பிறகே குறைய ஆரம்பிக்கும்.மே மாதத்தில், அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விடுவதால், வெயில் மிக உக்கிரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வெயில் சாதாரணமாக 100 டிகிரியை தாண்டும்.
இந்த ஆண்டு கோடை வெயில் துவங்கியதில் இருந்து வெயில் வாட்டி வதைக்க துவங்கியது. கடந்த மே 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கியதில் இருந்து அசானி புயல், வெப்பசலனம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வந்தது. கடல் சீற்றம், சூறைக்காற்று என இயற்கை மாற்றங்களால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
இதனால் கத்திரி வெயில் காலத்திலும் வெப்பம் 100 டிகிரியை எட்டாமல் இருந்தது. இந் நிலையில், கத்திரி வெயில் நாளை 28 ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, வெயில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
கடந்த 22ம் தேதி கடலுார் மாவட்டத்தில் பல இடங்களில் 102.2 டிகிரி வெயில் பதிவாகியது. அது முதல் தொடர்ந்து 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக 104.2 டிகிரி இருந்தது.இதனால், ஞாயிற்று கிழமை, விடுமுறை நாட்களில கூட மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளில் முடங்கிய நிலையில் அவதியடைந்து வருகின்றனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் அனல் காற்று வீசியதால், வாகனங்களில் செல்பவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.கடலுார் மாவட்டத்தில் கடல் காற்றும் அதிகமாக வீசுவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்து 5 நாட்களுக்கு நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வீட்டில் மின் விசிறி ஓடினாலும் வெப்பக் காற்று வீசுவதால் மக்கள் தவித்தனர். இதனால் மாலை நேரங்களில் கடலுார் சில்வர் பீச் மற்றும் சிறுவர் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் மற்றும் கோவில்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.பகல் நேரத்தில் இளநீர், குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கல்லுாரி மாணவியர் குடைபிடித்த படியும், முகத்தை துணியால் மூடியபடி செல்கின்றனர்.வெயிலின் கோரம், மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இடி, மின்னலுடன்திடீர் மழை

இதனிடையே கடலுார் மாநகரில் நேற்றிரவு 7:30 மணிக்கு வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசியது. 8:00 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நெல்லிக்குப்பத்திலும் கன மழை பெய்தது. சூறாவளி காற்றில் கீழ்பட்டாம்பாக்கத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் முறிந்து விழுந்தது. இதனால் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X