55 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.41 கோடி: குழு அமைத்து பணிகள் துவங்க நடவடிக்கை

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 41.22 கோடி ரூபாய் மதிப்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உட்பட, ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 55 கோவில்களில் திருப்பணி நடக்கவுள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 1,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், அந்தந்த கோவில்கள் வருமானத்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 41.22 கோடி ரூபாய் மதிப்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உட்பட, ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 55 கோவில்களில் திருப்பணி நடக்கவுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 1,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், அந்தந்த கோவில்கள் வருமானத்தை பொருத்து, அதன் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவில்களின் வருமானத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் கோவில் பராமரிப்பு, திருவிழா, திருப்பணி போன்றவை நடத்தப்படுகின்றன.



latest tamil news





அறிவிப்பு


இந்நிலையில் 2022 - 2023ம் ஆண்டு சட்ட சபை கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள 55 கோவில்களுக்கு திருப்பணி, குளம் சீரமைப்பு, அன்னதான கூடம், புதிய தேர் உள்ளிட்ட 159 பணிகளுக்கு மொத்தம் 41.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிக்கு 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த கோவில்களுக்கு அரசு வழிகாட்டுதல்படி, திருப்பணி குழு கமிட்டிகள் ஆய்வு செய்த பின், அதற்கான பணிகள் துவங்க இருப்பதாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்விரு மாவட்டங்களிலும், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்கள் பல உள்ளன. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு கோவில்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கோவிலும் திருப்பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், ராஜகோபால சுவாமி கோவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் ஆகிய ஐந்து கோவில்களில், திருப்பணிகள் நடக்க உள்ளன.


latest tamil news





புதிய தேர்


பெயர் வெளியிடாத ஹிந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 கோவில்களில், 159 பணிகள் நடப்பதற்கு அரசு அறிவித்துள்ளது. இதில் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் தேர் சீரமைப்பு, மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட இருக்கிறது.
குன்றத்துார் திருநாகேஸ்வரம் சேக்கிலார் கோவிலில் நடக்கும் 10 நாட்கள் திருவிழா, இதற்கு முன் ஒரு நாள் அரசு விழாவாக இருந்தது. இனி, மூன்று நாட்கள் அரசு விழாவாக நடக்க இருக்கிறது.
அதேபோல், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை விளக்கு பூஜை நடந்தது. இனி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், விளக்கு பூஜை நடக்க இருக்கிறது.அரசு வழிகாட்டுதல்படி திருப்பணி குழு கமிட்டி ஆய்வு செய்த பின், ஆகம முறைப்படி திருப்பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


சீரமைக்கப்பட உள்ள கோவில் குளங்கள்



வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்
நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மலைவையாவூர்
அகத்தீஸ்வரர் திருக்கோவில், நெமிலிச்சேரி
அழகிய சிங்கப்பெருமாள் கோவில், காஞ்சிபுரம்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
27-மே-202220:23:16 IST Report Abuse
MARUTHU PANDIAR இப்படி 41 கோடி ரூபாய்க்கு எஸ்டிமேட் என்பதெற்கெல்லாம் இவர்களுக்கு சட்டப் படியானை அதிகாரம் உண்டா என்பது சந்தேகமே என்கிறார்கள்========செட்டப் படியான அதிகாரம் இல்லையென்றால் இது திருப்பணி அல்ல ,,அவர்களின் 'திருட்டுப்பணி" தான் என்றும் அபிப்பிராயப் படுகிறார்கள்=======நாத்திகக் கூட்டம் ,,அதுவும் இந்துக்களை மட்டுமே எத்திக் கொண்டே இருக்கும் இவர்களுக்கு ஏன் இந்த வேலை ====நோக்கம் திருப்பணி தானா என்ற அடிப்படையில் ,, அக்கறை கொண்டவர்கள் யாரேனும் இந்த 41 கோடி மேட்டருக்கு எதிராக வழக்குப் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்றும் கூறுகிறார்கள்===
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
27-மே-202213:59:06 IST Report Abuse
bal திருட்டு திமுக - இன்னொரு ஸ்வாஹா....யாரவது கணக்கு வைத்து கொண்டிருக்கிறீரா.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
27-மே-202212:36:18 IST Report Abuse
சீனி விடியலில் திட்டத்தில் 41கோடி ஸ்வாஹா தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X