பாவு நூல் சப்ளை நிறுத்தம்: விசைத்தறிகள் முடங்கும் அபாயம்

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பல்லடம்: பாவு நுால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறிகளின் இயக்கம் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. சமீப நாட்களாக, நுால் விலை ஏற்றம் துணி உற்பத்தியாளர்களை பெரிதும்


பல்லடம்: பாவு நுால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறிகளின் இயக்கம் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது.latest tamil news
திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. சமீப நாட்களாக, நுால் விலை ஏற்றம் துணி உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்து வருகிறது.

பஞ்சு, நுால் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், நுால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, கடந்த 22ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.
போராட்டத்தை தொடர்ந்து, தினசரி, 20 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜவுளி உற்பத்தியாளர்களின் இந்த போராட்டம் காரணமாக, விசைத்தறி இயக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது.

விசைத்தறியாளர்கள் கூறுகையில், 'ஜவுளி உற்பத்தியாளர் மூலம் பாவு நுால்கள் பெற்று கூலிக்கு நெசவு செய்து வருகிறோம். நுால் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பாவு நுால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பாவு நுால்கள், ஓரிரு தினங்களுக்கு வரும். உற்பத்தி நிறுத்த போராட்டத்தால், திருப்பூர் மாவட்டத்தில், 30 சதவீதத்துக்கும் மேல் தறிகள் நின்றுள்ளன.


latest tamil news
வரும் வாரத்தில், பாவு நுால்கள் இன்றி, தறிகள் இயக்கம் மேலும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.இதனால், உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், விசைத்தறி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள், மவுனம் சாதிக்காமல், தொழில்துறையின் பிரச்னைகளை களைய முன்வர வேண்டும்'' என்றனர்.

நுால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து, கடந்த 22ம் தேதி முதல் ஜுன் 5ம் தேதி வரை, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள்அறிவித்தனர். போராட்டத்தை தொடர்ந்து, தினசரி, 20 கோடி ரூபாய் மதிப்பிலானஉற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
27-மே-202209:13:31 IST Report Abuse
veeramani முதலில் துணி உற்பத்தியாளர்கள் இந்த அடாவடி போக்கை கைவிடவேண்டும்.. துணி உற்பத்தியை மட்டும் யோசிக்க வேண்டாம். பருத்தி உற்பத்தி எவ்வளவு? விவசாயிகளுக்கு என்ன விலை? இவர்கள் கடந்த காலங்களில் பருத்திக்கு நியாய விலை கொடுக்காததால் விவசாயிகள் இறப்பு எத்துணை? இதனால் நியாய விலை தரக்கூடிய காய்கறி, பழங்கள் உற்பத்திக்கு விவசாயிகள் சென்றனர். கரும்பு போல துணி உற்பத்தியாளர்கள் விவசாயிகளிடம் அட்வான்ஸ் கொடுத்தது பயிர் செய்ய சொன்னாள் இக்கேணியில் பருத்தி விவசாயம் நடைபெறலாம். மேலும், தேவைக்கு அதிகம் உற்பத்தி நிச்சயமாக நிறுத்தபட வேண்டும்..
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
27-மே-202208:47:25 IST Report Abuse
தியாகு பஞ்சு விலை ஏறுது. ஏன் ஏறுது? உற்பத்தி குறைவு. ஏன் உற்பத்தி குறைவு? பருத்தி விளைவிக்க ஒரு விவசாயியும் ஆர்வம் காட்டுவதியிலை. ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? கஷ்டப்பட்டு விளைவிக்கும் பருத்திக்கு விவசாயிக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. ஏன் கிடைப்பதில்லை? இடை தரகர்கள் அவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள். ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? மோடிஜி கொண்டு வந்த விவசாய சீர்திருத்த சட்டங்களை தேச விரோதிகள் எதிர்ப்பதால். ஏன் தேச விரோதிகள் எதிர்க்கிறார்கள்? இடை தரகர்களிடம் இருந்து கமிஷன் கிடைப்பதால். இவ்வளவுதான் விஷயம். விவசாயத்தில் ஏன் இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை என்று இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை. இன்னமும் உங்களுக்கு புரியலைனா உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பதிவு. படித்துவிட்டு புரியாதமாதிரி நடிக்காமல், இச் கொட்டி கடந்து போகாமல் நாலு பேருக்கு பகிரவும். உங்களுக்கு புண்ணியமா போகும். ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய தீவனங்கள் விலை, தொழிலாளர்கள் கூலி இவற்றை சேர்த்து 15 ரூபாய் செலவு ஆகும். விவசாயிக்கு ஒரு லிட்டருக்கு வெறும் 10 ரூபாய் லாபம் கிடைக்கும். (ஆவின் நிறுவனமும் தனியார் நிறுவனங்களும் ஒரு லிட்டரை விவசாயிகளிடம் இருந்து 25 ரூபாய்க்குத்தான் கொள்முதல் செய்வார்கள்). ஒரு மாடு வைத்திருந்து அது தினமும் 10 லிட்டர் கொடுத்தால் விவசாயிக்கு லாபம் ஒரு நாளைக்கு வெறும் 100 ரூபாய் (ஒரு மாட்டுக்கு). ஒரு விவசாயினால் 5 மாடுகளுக்கு மேல் தனி ஆளாய் பராமரிக்க இயலாது. அதனால் அவர் 5 மாடுகள் வைத்திருந்தால் அவரால் மாதம் 15000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க இயலாது. இடைவேளை இன்றி நாள் முழுதும் உழைக்க வேண்டும். ஒருவேளை மாடுகளுக்கு நோய் வந்துவிட்டால், மாடுகள் சராசரி பால் உற்பத்தி கொடுக்கவில்லை என்றால், விவசாயிக்கு உடம்பு முடியவில்லை என்றால் அதோகதிதான். மாடுகள் வளர்த்தால் யாரும் கல்யாணத்திற்கு பெண் கூட கொடுக்கமாட்டார்கள். ஆனால் ஜோசெப் விசய் அண்ணா, ஒன்றரை டன் சூர்யா அண்ணா, காஃபி வாங்கி குடிக்க சொல்லும் கார்த்தி அண்ணா இவர்கள் எவ்வளவு மொக்கையாக படம் கொடுத்தாலும் ஒரு படத்திற்கு அவர்களுக்கு சம்பளம் 80 கோடி ரூபாய். ஆனால், இவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் விவசாயம் செய்யுங்க, மாடு வளருங்க என்று பிலிம் காட்டுவார்கள். பிறகு யாருக்கு விவசாயத்தின் மீதும், மாடுகள் வளர்ப்பதின் மீதும் ஆர்வம் வரும்? சமூக ஊடகங்களில், பேஸ் புக்கில், சினிமாவில், வாட்ஸ் அப்பில் விவசாயம் செய்ய இயலாது. நிழல் வேறு நிஜம் வேறு. உண்மை பல நேரங்களில் கசக்கும். கொஞ்சம் யோசிங்க டுமிழர்களே. பின் குறிப்பு: நானும் விவசாயம் செய்து, மாடுகள் வளர்த்து நாசமா போன ஒரு அப்பாவி. மறக்காம இந்த பதிவை நாலு பேருக்கு பகிர்ந்து விவசாயியின் தலைவிதியை தமிழ் கூறும் நல் உலகுக்கு எடுத்துரைக்கவும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-மே-202208:04:14 IST Report Abuse
Lion Drsekar இது ஏதோ நூல் பிரச்னை, எங்கோ நடக்கிறது என்று சும்மா இருக்கக்கூடாது, இலங்கையை போல், இந்த ஒரு பொருளாதார தேக்கம் வேலை வாய்ப்பை இழக்க செய்வதோடு மட்டும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியையே சீர்குலைத்துவிடும், ஒரு குளத்தில் கல் எறிந்தால் எப்படி வளையங்கள் வந்து கொண்டு இருக்குமோ அப்படி இந்த நூல் விலையேற்றதால் வந்த விளைவு தறி, துணி வியாபாரம், ஏற்றுமதி, உள்நாட்டில் கடைகள் மூடும் அபாயம், வேலைவாய்ப்பை இழக்கும் நிலை, அடுக்கிக்கொண்டே போகலாம், வருத்தத்துடன் கூறிக்கொள்வது ஒன்று எது எப்படி போனாலும் அரசாங்கத்துக்கு வரி வசூலிப்பதில் அதுவும் கொரோனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடுத்த வேலை சோற்றுக்கு கஷ்டப்பட்டு நேரத்தில் மீண்டும் எப்படி வருவோம் என்ற நிலையில் ஏற்றியிருக்கிறார்களே சொத்து வரி ? இந்த சாபம் யாரையும் சும்மா விடாது, அதே போன்று பிழைப்புக்கே வழி இல்லாமல் திணறும் நூல் பிரச்சனையை உடனடியாக தீர்க்கவேண்டும், இப்போவே ஐடி கம்பெனிகள் ஏதோ சற்று முணுமுதுகொண்டு இருக்கிறார்கள், குளோபல் ரெஸிஷன் என்கிறார்கள், ஆகவே மிகவும் ஜாகிரையாக நடந்துகொள்ள வேண்டிய ஒரு நிலையில் அரசு இருக்கிறது, மெத்தனம் வேண்டாம், போட்டிபோட்டுக்கொண்டு வெளிநாட்டில் இருந்து நிபுணர்களை இறக்குமதி செய்வதாக அறிவுப்பு வந்தது அவர்களை கலந்து ஆலோசியுங்கள், தீர்வு காணுங்கள் வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X