'நீங்கள் யார்' என மேயரை முற்றுகையிட்ட மக்கள்: கோரிக்கைகளை கேட்காமலேயே 'எஸ்கேப்'

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகையிட்ட மக்களிடம் கோரிக்கைகளை கேட்காமலேயே மேயர் இந்திராணி புறப்பட்டு சென்றார்.மாநகராட்சி 97வது வார்டிற்குட்பட்ட இக்காலனியில் ரூ.25 லட்சத்தில் சுகாதார நல மையம் அமைக்க பூமி பூஜை மேயர் இந்திராணி தலைமையில் நேற்று நடந்தது. அங்கு வந்த அப்பகுதி மக்கள், 'நீங்கள் யார். என்ன பூஜை.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகையிட்ட மக்களிடம் கோரிக்கைகளை கேட்காமலேயே மேயர் இந்திராணி புறப்பட்டு சென்றார்.

மாநகராட்சி 97வது வார்டிற்குட்பட்ட இக்காலனியில் ரூ.25 லட்சத்தில் சுகாதார நல மையம் அமைக்க பூமி பூஜை மேயர் இந்திராணி தலைமையில் நேற்று நடந்தது. அங்கு வந்த அப்பகுதி மக்கள், 'நீங்கள் யார். என்ன பூஜை. எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை' என கேள்வி எழுப்பினர்.



latest tamil news




சுகாதார நல மையம் அமைய போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 'இங்கிருந்து அரை கி.மீ., துாரத்தில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையும், நிலையூர் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. எங்களுக்கு அது போதும்' என்றனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், 'இப்பகுதி கழிப்பறை 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டி கிடக்கிறது. கண்மாய்க்கரையை பெண்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். சில ஆண்கள் மறைந்து நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. குடிநீர் வசதி இல்லை. ரோடு பராமரிப்பு இல்லை' என குமுறினர்.பின்பு மேயர் காரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அவர்களை கவுன்சிலர் சிவசக்தி, அதிகாரிகள் சமரசம் செய்தபோது, அதை பொருட்படுத்தாமலும், மக்களின் கோரிக்கைகளை கேட்காமலும் மேயர் புறப்பட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மே-202216:08:18 IST Report Abuse
J.V. Iyer பணம் வாங்கிக்கொண்டு வோட்டு போட்டாகிவிட்டது. வெங்காயக்காரர்கள் போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக குவிக்கின்றனர்.. மக்களுக்கு ஏது உரிமை? கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
27-மே-202221:43:43 IST Report Abuse
madhavan rajanதிராவிட மாடலை விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்டு இப்போது அந்த மாடல் பிடிக்கலைன்னா என்ன பண்றது. இப்போ இருக்கிறவங்களுக்கு இந்த ஏமாத்துற திராவிட மாடலை தவிர வேற தெரியாதே. ஐம்பது ஆண்டுகளாக அவர்கள் செய்து வருகிறதை புரிந்து கொள்ளாமல் மக்கள் ஏமாற்றினால் அதற்கு அவர்களா பொறுப்பு....
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
27-மே-202215:25:43 IST Report Abuse
krishna இதுதான் விடியல் அரசு.அரை கிலோ meteril ஆரம்ப சுகாதார நிலையம்.அனால் மேலும் ஒரு கட்டிடம் ஏன் கமிஷன்.இந்த திராவிட மாடல் திருட்டு தியமுக்க மேயர் இந்திராணிக்கு..அனால் நம்ம விலை போன ரெட் லைட் ஊடகங்கள் துண்டு சீட்டு மேட்டூர் பறக்கும் தட்டு கோமாளி ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுது என கூவுவார்கள்.இவனுக லெவல் ஓசி பிரியாணி மட்டுமே.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
27-மே-202214:38:29 IST Report Abuse
Manguni இந்த பகுதி ஏழை கைத்தறி நெசவாளிகள் வாழும் பகுதி.. கிட்டத்தட்ட தீவு போல இருக்கும்.. எல்லாவற்றிலும் ஊழல். திருப்பரங்குன்றம் குடியிருக்கும் கடவுளின் பெயரில் இருக்கும் ஒரு அம்மா கட்சி நபர் தன சொந்த லாபத்துக்காக சிதைத்து வருகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X