12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (27.5.2022 - 2.6.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சுக்கிரன், புதன், சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். விநாயகரை மனதில் நினைத்து செயல்பட மேன்மை அதிகரிக்கும்.அசுவினி: ஞாயிறு பகல் வரையில் உற்சாகமாக செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வேலை நிமித்தமாக
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் கன்னி,  விருச்சிகம்,  தனுசு,மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (27.5.2022 - 2.6.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சுக்கிரன், புதன், சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். விநாயகரை மனதில் நினைத்து செயல்பட மேன்மை அதிகரிக்கும்.

அசுவினி: ஞாயிறு பகல் வரையில் உற்சாகமாக செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வருவாய் உண்டாகும்.

பரணி: வாரத்தின் தொடக்கத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடந்தேறும். வெளித்தொடர்புகள் ஆதாயம் தரும். செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். யோசிக்காமல் செய்யும் வேலைகளில் நெருக்கடிகள் உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: தொழிலில் புதிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். நண்பர்கள் வழியே புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நிலைமைகளை சமாளிக்கும் அளவிற்கு வரவுகள் இருக்கும். நட்புகளிடம் மனக்கசப்பு உண்டாகலாம். தவறான சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும்.


ரிஷபம்


செவ்வாய், குரு, கேது நன்மைகளை வழங்குவார்கள். ஆலங்குடி குருபகவானை மனதில் நினைத்து செயல்பட நினைத்தவை நடந்தேறும்.


latest tamil news



கார்த்திகை 2, 3, 4: ஞாயிறு வரையில் சுப நிகழ்வுகள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். செயல்களில் மந்தமான நிலை இருக்கும். அதன்பிறகு நினைத்த செயல்களை நடத்தி முடிப்பீர்கள். படபடப்பு டென்ஷன் என்று உருவாகச்செய்யும். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும்.

ரோகிணி: அரசு வகையில் இழுபறி, நெருக்கடி என்று ஏற்பட்டாலும் உங்கள் புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள். பகைவர்களின் தொல்லைகள் விலகும் என்பதால் உங்கள் முயற்சிகள் ஜெயமாகும். தொழிலில் லாபநிலை உண்டாகும்.

மிருகசீரிடம் 1, 2: நெருக்கடிகளில் இருந்து மீளுவீர்கள். உங்கள் முயற்சிகளில் திங்கள் கிழமையில் இருந்து கூடுதல் பலன்கள் கிடைக்கும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். உங்களுடைய வேலைகளை அந்நியரை நம்பி ஒப்படைத்திட வேண்டாம்.


மிதுனம்


சுக்கிரன், புதன், ராகு, சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். திருமாலை மனதில் எண்ணி செயல்பட நன்மைகள் கூடும்.

மிருகசீரிடம் 3, 4: எதிர்பார்த்தவற்றில் நன்மைகள் உண்டாகும். முதலீடுகளில் இருந்து வரவு காண்பீர்கள். அந்நியர்கள் வழியே ஆதாயநிலை உருவாகும். திடீர் அதிர்ஷ்டத்தை இந்த வாரத்தில் காண்பீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் பயன்தரும்.

திருவாதிரை: கடுமையான நெருக்கடிகளில் இருந்து மீளுவீர்கள். திடீர் வரவுகளால் கடன்களை அடைப்பீர்கள். உங்கள் திறமை இக்காலத்தில் பளிச்சிடும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பிள்ளைகளால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3: தடைபட்டிருந்த வருவாய் வரத்தொடங்கும். சிறிய முயற்சியிலும் பெரிய பலன்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் நன்மைகளைக் காண்பீர்கள். பூர்வீக சொத்துகள் பற்றிய எண்ணம் இப்போதைக்கு வேண்டாம். தொழிலில், உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அரசு வகையிலான செயல்களில் எச்சரிக்கை தேவை.


கடகம்


குரு, சூரியன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். சந்திர பகவானை மனதில் நினைத்து செயல்பட செயல்களில் தெளிவு உண்டாகும்.

புனர்பூசம் 4: வாரத்தின் முற்பகுதியில் வேலைகளில் இழுபறி இருக்கும். திங்கள் கிழமை முதல் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமணம் குறித்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்குகள் தீரும். நண்பர்கள் ஆதரவால் மனதிற்கினிய சம்பவங்கள் உண்டாகும்.

பூசம்: நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடல் நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வகையிலான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாரத்தின் பிற்பகுதியில் வரவும் செலவும் போட்டி போடும். உங்கள் புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றையும் சரி செய்வீர்கள்.

ஆயில்யம்: தாய்வழியில் சில சங்கடங்கள் தோன்றும். உறவுகள், நண்பர்கள் உதவி புரிவார்கள். அந்நிய மனிதர்களின் வழியே தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். அதிக உழைப்புகளால் உடல் ஆரோக்கியத்தில் சங்கடங்கள் உருவாகும்.


சிம்மம்


சுக்கிரன், சூரியன், கேது நற்பலன்களை வழங்குவார்கள். குல தெய்வத்தை எண்ணி செயல்பட்டு வர பிரச்னை விலகும்.


latest tamil news



மகம்: எதிர்பார்க்கும் முயற்சிகளில் தாமதம் உண்டாகும். எதிரிகளின் கை மேலோங்கும். உங்கள் திட்டங்களில் ஒன்று நிறைவேறாமல் போகும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும் என்றாலும் எல்லாவற்றையும் சமாளித்திடக் கூடியவர்களாக இருப்பீர்கள்.

பூரம்: உங்கள் மன தைரியத்தால் துணிச்சலாக சில செயல்களில் ஈடுபடுவீர்கள். அரசு வகையில் ஆதாயமான நிலை ஏற்படும். யோசிக்காமல் சில செயல்களில் ஈடுபட்டு அதன் வழியே சங்கடங்களை உண்டாக்கிக் கொள்வீர்கள். சகோதரர்கள் வழியில் சங்கடங்கள் உண்டாகும்.

உத்திரம் 1: உங்கள் மனம் ஒரு நேரம் இருப்பதுபோல் மறு நேரம் இல்லாமல் போகும். நிதானிக்காமல் சில செயல்களில் ஈடுபட்டு உங்கள் பளுவை அதிகரித்துக் கொள்வீர்கள். எதிரிகள் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படும். உத்தியோகத்தில் அதிகபட்சமான கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.


கன்னி


குரு, சுக்கிரன், புதன் யோகமான பலன்களை வழங்குவார்கள். உப்பிலியப்பரை மனதில் நினைத்து செயல்பட நன்மைகள் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4:ஞாயிற்றுக்கிழமை பகல் வரையில் உங்கள் செயல்கள் இழுபறியாகவே இருக்கும். அதன் பிறகு உங்கள் முயற்சிகளில் நன்மைகள் தோன்றும். பெற்றோர் வகையில் இருந்த பிரச்சனைகள் விலகும். உங்கள் அறிவாற்றலின் காரணமாக குடும்பத்தில் உண்டான பிரச்சனைகளை சரி செய்வீர்கள். நன்மைகளைக் காணும் வாரமாக இருக்கும்.

அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு விலகும். திருமண வயதினருக்கு திருமணம் கூடி வரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்தவற்றில் லாபங்கள் உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை 1, 2: குடும்ப வகையில் சில குழப்பங்கள் வந்து போகும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும். பிள்ளைகளின் போக்கு உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் என்றாலும் உங்கள் முயற்சியின் அளவிற்கே முன்னேற்றம் இருக்கும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

சந்திராஷ்டமம்: 27.5.2022 காலை 6.00 மணி - 29.5.2022 மதியம் 12.18 மணி


துலாம்


செவ்வாய், சுக்கிரன் சந்தோஷத்தை வழங்குவார்கள். மகாலட்சுமியை எண்ணி செயல்பட்டுவர நன்மைகள் உண்டாகும்.

சித்திரை 3, 4 : சப்தம ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன், ராகு உங்கள் மனதில் ஆசைகளை உண்டாக்குவார்கள். ஞாயிறு பகல்வரை மனக்காரகனான சந்திரனும் அங்கே இருப்பதால் எதிர்பாலினரின் ஈர்ப்பில் உங்கள் சிந்தனையை இழக்க நேரும் திங்கள் முதல் செயல்களில் நெருக்கடி தோன்றும். ஏதாகிலும் ஒரு குழப்பம் மனதில் இருக்கும்.

சுவாதி: உங்கள் கவனத்தை சிதற வைக்கும் சம்பவங்கள் நடைபெறும். ஆசையின் காரணமாக உங்கள் மனம்போன போக்கில் செல்வீர்கள். கட்டுப்பாடுகளால் உங்களை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய ஆட்களிடமும் நட்புகளிடமும் எச்சரிக்கை தேவைப்படும். சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடங்கள் தோன்றும்.

விசாகம் 1, 2, 3 :அரசு வழியில் எதிர்பார்த்தவற்றில் இழுபறி இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவுதான் கவனமாக செயல்பட்டாலும் ஏதேனும் சில தவறுகள் உண்டாகும். எதிர்பாலினராலும் நண்பர்களாலும் உங்கள் வாழ்க்கை திசைமாறக்கூடிய வாய்ப்புண்டு என்பதால் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.

சந்திராஷ்டமம்: 29.5.2022 மதியம் 12.18 மணி - 31.5.2022 இரவு 11.19 மணி


விருச்சிகம்


குரு, புதன், ராகு யோகத்தை வழங்குவார்கள். குரு பகவானை மனதில் நினைத்து செயல்பட நன்மைகள் உண்டாகும்.

விசாகம் 4: செவ்வாய்க்கிழமை வரை உங்கள் முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும். அதன் பிறகு உங்கள் செயல்களில் சில சிரமங்கள் உண்டாகும். தெளிவான முடிவுகளுடன் நீங்கள் நினைத்ததை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். லாபகரமான வாரமாக இருக்கும். உங்கள் கவுரவம் உயரக்கூடிய அளவிற்கு உங்கள் செயல்கள் அமையும்.

அனுஷம்: பகைவர்களால் உண்டான தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும். பெற்றோர்கள் வழியில் நன்மைகளைக் காண்பீர்கள்.

கேட்டை: புதிய முயற்சி அனுகூலமாகும். திருமண வயதினருக்கு அதற்குரிய யோகம் உண்டாகும். சிலவற்றில் கடுமையான முயற்சிகள் தேவைப்படும். வீடு, நிலம் வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகி சிறு சிறப்பாக செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 31.5.2022 இரவு 11.19 மணி - 2.6.2022 நாள் முழுவதும்


தனுசு


சூரியன், சுக்கிரன், கேது யோகத்தை வழங்குவார்கள். சனீஸ்வரருக்கு ப்ரீத்தி செய்ய சங்கடங்கள் விலகும்.

மூலம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெற்று பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். வார தொடக்கத்தில் வருவாயும் சந்தோஷமும் அதிகரித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும்.

பூராடம்: உங்கள் வாக்கிற்கு மரியாதை கூடும். நேர்மையான வழியில் வரவுகள் உண்டாகும். அரசு வழி முயற்சிகளிலும் பலன்கள் உண்டாகும். புதிய நட்பினால் சங்கடங்களை விட்டு வெளியில் வருவீர்கள். ஞாயிறு பகல் வரையில் பிள்ளைகள் வழியே உழைப்பு அதிகரிக்கும். பயணத்தில் கவனம் தேவைப்படும்.

உத்திராடம் 1: தொழில் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். அந்நியர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவைப்படும். எதிர்பார்த்த சில விஷயங்கள் இழுபறியானாலும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும். உறவுகளை நம்பி எந்தவொரு செயலிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம்.


மகரம்


சுக்கிரன், செவ்வாய், புதன் நன்மைகளை வழங்குவார்கள். குல தெய்வத்தை வழிபடுவதின் வழியே நன்மைகள் உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4: நெருக்கடிகளை சந்தித்து மீளுவீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பண வருவாய்க்குரிய முயற்சிகள் வெற்றியாகும். தந்தை வழியே நன்மைகள் உண்டாகும். அலைச்சல் அதிகரித்து அதன் வழியே சோர்வடைவீர்கள் என்பதால் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். நட்புகளிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.

திருவோணம்: அந்நியர்களின் நட்பினால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும். தாய்வழி உறவுகளால் அனுகூலமும் ஆதாயங்களும் உண்டாகும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட ஆரம்பிப்பார்கள் என்பதால் எச்சரிக்கை அவசியம்

அவிட்டம் 1, 2: உங்கள் முயற்சிகளால் நன்மைகளைக் காண வேண்டிய வாரமிது. ஆதாயம் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள் என்றாலும் ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவையாக இருக்கும். அவசரத்தனம் இப்போது வேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்தவற்றில் நன்மைகள் உண்டாகாமல் போகும்.


கும்பம்


குரு, சுக்கிரன், ராகு உங்களுக்கு யோகத்தை வழங்குவார்கள். நள்ளாற்று நாயகனை மனதில் எண்ணி செயல்பட சிறப்புகள் தோன்றும்.

அவிட்டம் 3, 4: நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்தியோகம் சிறப்படையும். வரவுகள் அதிகரித்து மகிழ்வீர்கள். பேச்சில் நிதானம் தேவைப்படும். குறுக்கு வழியில் உங்களை சிலர் அழைத்துச்செல்லக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

சதயம்: தடைகள் விலகும். நீங்கள் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உடல்நிலையில் பாதிப்புகள் அகன்று சீராகும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். குடும்பம், சகோதரர்கள் வகையில் நன்மைகள் தோன்றும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3: எதிரிகளால் உண்டான சங்கடங்களை முறியடிப்பீர்கள். ஆரோக்கியம் சீரடைந்து உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள். வருவாயில் சில தடைகள் உண்டாகி உங்களுக்கு சிரமத்தை வழங்கும்.


மீனம்


சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவார்கள். ஸ்ரீரங்கநாதர் வழிபாடு சங்கடங்களை விலக்கும்.

பூரட்டாதி 4: ஞாயிறு பகல் வரையில் உங்கள் செயல்கள் இழுபறியாகும். அதன்பின் உங்கள் முயற்சிகள் நடந்தேறும் என்றாலும் புதிய நண்பர்களால் சில படிப்பினைகள் உண்டாகும். உடல் ரீதியாக கவனம் தேவைப்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத நிலை உண்டாகும். உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.

உத்திரட்டாதி: பேச்சில் நிதானமும் புதியவர்களிடம் கவனமும் தேவை. அரசு வழியிலான செயல்களில் நெருக்கடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணப்பேச்சு எழும். வீடு மனை வாங்கும் சிந்தனை மேலோங்கும் வாரத்தின் பிற்பகுதி நன்மையாக இருக்கும். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிப்பதுடன் சோர்வும் உண்டாகும்.

ரேவதி: யோசித்து செயல்பட வேண்டிய வாரம். அரசு வகையிலான முயற்சிகளில் நன்மைகள் உண்டாகும். வருவாயில் இருந்த தடைகள் விலகும். திங்கள் கிழமையில் இருந்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியுண்டாகும். ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடல்நலனில் சங்கடங்கள் உருவாகலாம் என்பதால் கவனமுடன் இருங்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X