சென்னை ; அரசுப் பணியில்லாத தனியார் முதுகலை மருத்துவ மாணவர்கள் தற்காலிக பணி ஒப்பந்தத்தில் மட்டுமே உள்ளனர். எனவே அவர்கள் நிரந்தர அரசு ஊழியர்கள் கிடையாது. எனவே அவர்களுக்கு சிறப்புத் தகுதி தேர்வு நடத்துவது செல்லாது. அனைவரையும் போல பொது தகுதி தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கடந்த 26.4.2022 அன்று தீர்ப்பளித்தப் பின்னரும், தமிழக சுகாதாரத் துறை செயலாளரும், மருத்துவ தேர்வு ஆணையமும் (MRB), சிறப்புத் தகுதி தேர்வை நாளை (28.5.22) அன்று நடத்த முற்படுவதை சட்டப் போராட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக சிறப்பு தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலை கைவிட வேண்டும்.
இது தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஏற்கனவே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே மாண்புமிகு முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு, சிறப்பு தகுதி தேர்வை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் சட்டப் போராட்டக் குழு மற்றும் மனுதாரர் தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட வேண்டும் என சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை மற்றும் பொது செயலாளர் தாகிர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE