கரூர் மாவட்டத்தில் வெற்றிலை ஆராய்சி மையம் அமைக்கப்படுமா?

Added : மே 27, 2022 | |
Advertisement
'வெற்றிலை ஆராய்சி மையம் துவங்க வேண்டும்', என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் சேமங்கி, முத்தனுார், புங்கோடை, கோம்புபாளையம், என்.புகழூர், புன்செய் புகழூர், பாலத்துறை திருக்காடுதுறை, லாலாப்பேட்டை, கருப்பத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில், 500 ஹெக்டேர் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றின் தண்ணீர் பாயும் வெற்றிலைக்கு எப்பவும்


'வெற்றிலை ஆராய்சி மையம் துவங்க வேண்டும்', என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் சேமங்கி, முத்தனுார், புங்கோடை, கோம்புபாளையம், என்.புகழூர், புன்செய் புகழூர், பாலத்துறை திருக்காடுதுறை, லாலாப்பேட்டை, கருப்பத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில், 500 ஹெக்டேர் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றின் தண்ணீர் பாயும் வெற்றிலைக்கு எப்பவும் மவுசு அதிகம் என்பதால், இப்பகுதிகளில் விளையும் வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கிறது.
ஒரு ஏக்கர் வெற்றிலை பயிர் செய்ய, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. வெற்றிலை பயிர் செய்யப்பட்ட, ஒரு ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து நல்ல மகசூலைபெற முடியும். இத்தொழிலில் ஆயிரக் கணக்கில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வெற்றிலையில் வாடல்நோய், வங்கு இலைச்சுருட்டை ஈரப்புள்ளி, செம்பேன், செதில்பூச்சி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால், வெற்றிலைகளில் ஏற்படும் நோய்களை தடுக்கவும் புதியதாக வெற்றிலை ரகங்களை உருவாக்கவும், இப்பகுதியில் ஆராய்ச்சி மையம் தேவை என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: திருச்சி மாவட்டம் சிறுகமணியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம், அங்குள்ள கரும்பு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் சிறுகமணியிலிருந்து கோவைக்கு மாற்றப்பட்டது. அங்கு வெற்றிலை ஆராய்ச்சி மையம் வெற்றிலை பற்றியோ, நோய் தடுப்பதுபற்றியோ எந்தவித ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஆராய்ச்சி மையம் இடம்மாறி போனதுடன் செயல்படாமல் உள்ளது. வெற்றிலை பயிர் அதிகம் பயிரிடப்படும், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்.
வெற்றிலையை தாக்கும் நோய்களால் வெற்றிலை பயிரை காப்பாற்ற முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் இத்தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான விசாயிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே வெற்றிலை பயிரில் ஏற்படும் நோய்களை களையவும், புதிதாக வெற்றிலை பயிர்களை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X