வாய்க்கால் புனரமைப்பு பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : மே 27, 2022 | |
Advertisement
'வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.குளித்தலையில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்தது. கரூர் மாவட்டம் சேர்த்த குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகலுார் உள்ளிட்ட தாலுகாவைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள்,


'வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குளித்தலையில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்தது. கரூர் மாவட்டம் சேர்த்த குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகலுார் உள்ளிட்ட தாலுகாவைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.
'கடவூர் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு அருகிலேயே குவாரிகள் செயல்பட்டு வருவதால் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. குவாரிகளுக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்கும் முன், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கருத்தில் கொள்ள வேண்டும். மாயனூர் முதல் தாயனூர் வரை கட்டளை மேட்டு வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உழவர் மன்ற அமைப்பாளர் ராஜேஸ்வரி: குளித்தலை கிராம பகுதியில் எந்த விதமான அறிவிப்பும் இல்லாமல், அடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது.வீட்டு மின் சாதனங்கள் சேதம் ஏற்படுகிறது.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., லியாகத் அலி, ஆர்.டி.ஓ., புஸ்பாதேவி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் கறவை மாடு பராமரிப்பு மகளிர் சுய உதவி குழு கடன், மாற்றுத்திறனாளி கடன் என, 12 பேருக்கு, 12.80 லட்சம் ரூபாய்க்கான நிதி உதவியை கலெக்டர் பிரபுசங்கர், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X