எனது ரகசிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ: சபாநாயகரிடம் கார்த்தி சிதம்பரம் முறையீடு

Added : மே 27, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
புதுடில்லி: சிபிஐ அதிகாரிகள் தனது ரகசியமான மற்றும் முக்கியமான தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், இது பார்லிமென்ட் ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதான நேரடி தாக்குதல் என்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார்.தமிழகத்தை சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின்
Karti Chidambaram, CBI raids, Loksabha Speaker, Om Birla, Grossly Illegal, கார்த்தி சிதம்பரம், சிபிஐ ரெய்டு, விசாரணை, லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சிபிஐ அதிகாரிகள் தனது ரகசியமான மற்றும் முக்கியமான தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும், இது பார்லிமென்ட் ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதான நேரடி தாக்குதல் என்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்., எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், தனது செல்வாக்கை பயன்படுத்தி, சீன நாட்டினர் 263 பேருக்கு சட்ட விரோதமாக ‛விசா' பெற்றுத் தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சமும் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்தது. அவரது விசாரணையின்படி, கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.

இதனையடுத்து நேற்று (மே 26) டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரம், இன்று 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக அவர் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நான் முற்றிலும் சட்டவிரோதமான மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு பலியாகிவிட்டேன். இந்த ரெய்டில் சிபிஐ.,யின் சில அதிகாரிகள், நான் உறுப்பினராக உள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கான பார்லி நிலைக்குழு தொடர்பான எனது மிகவும் ரகசியமான மற்றும் முக்கியமான தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினர்.


latest tamil news



மேலும், சாட்சிகள் குழுவிடம் அளித்த வாக்குமூலங்கள் தொடர்பான எனது கையால் எழுதப்பட்ட குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. ஒரு எம்.பி.,யாக எனது கடமைகளில் தலையிடுவது தொடர்பான சிபிஐ.,யின் இந்த நடவடிக்கைகள், நமது பார்லிமென்ட் ஜனநாயகக் கோட்பாடுகளின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்த விவகாரம் எனது பார்லிமென்ட் சிறப்புரிமையை அப்பட்டமாக மீறுவதாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
28-மே-202200:04:22 IST Report Abuse
M  Ramachandran இங்கிலாந்தில் பிரதமரென படாத பாடு படுகிறார் இஙகு என்னடா வென்றால் திருடியது தெரிந்தும் மக்கள் சும்மா விடுகிறார்கள். சிவகெங்கைய மக்களுக்கு உணர்ச்சி இல்லையா?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
27-மே-202220:58:12 IST Report Abuse
M  Ramachandran திரு ட்டு களவாணி இது போனாய் உத்தம புத்திரன் போனால் பேசுது பார். இது திருட்டு தானம் செய்யும்போனது பாராளு மன்றத்திலேயே இல்லை.இதிலிருந்தேனா தெரிய வில்லையா அப்பனுக்கு பிள்ளையை தப்பாமல் பிறந்திருக்கு யேன்று.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-மே-202220:53:05 IST Report Abuse
Rasheel யோக்கியன் என்றால் அதை கோர்ட்டில் நிரூபித்து வெளியில் வரலாம். திருடனுக்கு எங்கயோ தேள் கொட்டினால் சபாநாயகர் என்ன செய்வார். படித்த திருடன் அறிவியல் பூர்வமாக திருடுகிறான். அப்புறம் ஆங்கிலம் பேசி தப்ப முயற்சிக்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X