தொழில்நுட்பத்தில் அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி தாக்கு

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி: கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் தொழில்நுட்பத்தில் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாததால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.டில்லியில், ஆளில்லா விமானங்கள் கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஆளில்லா விமானங்களின் தொழில்நுட்பத்தில், இந்தியா முழுவதும் காணப்படும் உற்சாகம் ஆச்சர்யமாக உள்ளது.
Poor, indifference, tech, governance, PM Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் தொழில்நுட்பத்தில் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாததால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


latest tamil news


டில்லியில், ஆளில்லா விமானங்கள் கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஆளில்லா விமானங்களின் தொழில்நுட்பத்தில், இந்தியா முழுவதும் காணப்படும் உற்சாகம் ஆச்சர்யமாக உள்ளது. இது இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையின் சாத்தியகூறுகளை காட்டுகிறது. அரசு திட்டங்களை கடைசி வரைக்கும் கொண்டு சேர்ப்பதற்கு தொழில்நுட்பம் வழி வகுத்துள்ளது. விவசாயம், விளையாட்டு, பாதுகாப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மையில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரிக்கும். நாடு முழுவதும் நடக்கும் வளர்ச்சி பணிகளை குறித்து, ஆளில்லா விமானங்களின் உதவியுடன் அதிகாரிகளுடன் ஒவ்வொரு மாதமும் ஆலோசனை நடத்தி வருகிறேன்.


latest tamil news


8 ஆண்டுகளுக்கு முன் நல்லாட்சிக்கான புதிய தாரக மந்திரத்தை செயல்படுத்த துவங்கினோம். குறைந்தபட்ச அரசு மற்றும் அதிக நிர்வாகம் என்ற பாதையில் நடந்து, எளிதாக வாழ்வதற்கும், தொழில் செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த 2014க்கு முன்பு, தொழில்நுட்பமானது பிரச்னைக்கான பகுதியாக கருதப்பட்டதுடன், ஏழைகளுக்கு எதிரானது என முத்திரை குத்தப்பட்டது. இதனால், 2014ல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அக்கரையற்ற சூழல் காணப்பட்டது. இதனால், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202222:47:53 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K சாதாரண அறிவியல் அறிவே திராவிட கட்சிகளுக்கு கிடையாது. இதில் தொழில் நுட்பம் என்றால் என்ன என்று வேறு கேட்பார்களே!!!!!!மின்வெட்டுக்கு அணில் தான் காரணம் என்பார்கள். அணை நீரை தெர்மோகோல் வைத்து மூடுவாரகள். பேருந்தில் பயணிப்பவர்களுக்கு தான் கட்டண உயர்வே தவிர பயணிக்காதவர்களுக்கு அல்ல என்று சொல்லும் அறிவாளிகள் உள்ள மாநிலம். இப்படிப்பட்ட விஞ்ஞானிகள் தான் தமிழக அரசியலுக்கு தேவை என்றாகி விட்டது. பெரியார், அண்ணா, கருணாநிதி தான் முக்கியம். "இவர்களை அறிவாளிகள் என்று நினைக்கும் கூட்டம்" ஆட்சி செய்தால் என்ன மாதிரியான அறிவை நாம் எதிர்பார்க்க முடியும்.பணம் என்றால் வாய் பிளக்கும் கூட்டமாயிற்றே!!!
Rate this:
Cancel
27-மே-202219:01:02 IST Report Abuse
அப்புசாமி அன்னைக்கி நேரு ட்ரோன் வாங்கி உட்டிருந்தால் சீனாக்காரன் ஜெயிச்சிருப்பானா? அன்னிக்கே என்னை பிரதமரா தேர்ந்தெடுத்திருந்தால் இந்நேரம் நாம் எங்கியோ போயிருப்போம். உலகமே நம்ம காலடியில் கிடக்கும்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-மே-202217:31:47 IST Report Abuse
Duruvesan சூப்பர் சார், நீங்க அக்கறை காட்டிட்டீங்க, சரி, என்னா கிழிச்சிங்க, சொல்லுங்க கேட்போம், சொல்ல மாட்டீங்க, ஏன் சார் பொய் பித்தலாட்டம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X