தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா நிதின் கட்கரி?: அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (63) | |
Advertisement
சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்ததாக தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டினார்.பிரதமர் மோடி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று (மே 26) சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு
Nitin Gadkari, Tamil Anthem, Mano Thangaraj, மனோ தங்கராஜ், அமைச்சர், நிதின் கட்கரி, தமிழ்த்தாய் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்ததாக தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று (மே 26) சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தபோது, ரூ.31,530 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் விழா மேடையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அனைவரும் எழுந்து நின்றனர்.


latest tamil news


இந்த நிகழ்வின்போது காணொலியில் பங்கேற்ற நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் அவமதித்துள்ளதாக தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: கடந்த 2018ம் ஆண்டு ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்தை நிதின் கட்கரி புறக்கணித்தார். தற்போது அமைச்சர் எழுந்து நிற்காதது யதார்த்தமாக நடந்ததாகத் தெரியவில்லை. இதன் மூலம் தமிழக மக்களை மத்திய அமைச்சர் அவமதித்துள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏன் எழுந்து நிற்கவில்லை என விளக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதனை பதிவிட்டிருந்த நிலையில், தமிழில் பதிவிட்டதை தற்போது நீக்கியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
28-மே-202210:36:28 IST Report Abuse
Girija ஒரு மேடையில் தமிழ்த்தாய் பாட்டை நீங்கள் ஒரு முறை தனியாக பாடிடிகாட்டேன் பாப்போம்? அது கூட வேண்டாம் மனப்பாடமாக ஒப்பித்து காட்டேன் பாப்போம்?
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
28-மே-202200:38:31 IST Report Abuse
Desi எ ஆர் ரஹ்மானின் தமிழ் தாய்யோட வாழ்த்து போடறீங்களா இல்லை காவிய தமிழ் தாயோட வாழ்த்து போடறீங்களான்னு அவருக்கு சொல்லி இருக்கன்மும்.
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
28-மே-202200:21:25 IST Report Abuse
Bala நிதின் கட்கரி அவர்கள் எழுந்து நிற்கவில்லை என்பது தவறுதான். ஆனால் தமிழ் மாடல் ஆட்சின்னு தைரியமாக சொல்ல வக்கில்லை. திராவிட மால்னு கூவிகிட்டு திரியிறாய்ங்க. தமிழணங்கு என்று போட்டு ஒரு பேய் படம் போட்ட திலிப் என்ற ஏ ஆர் ரஹ்மான் மட்டும் இனிக்குதா உங்களுக்கு? நடுநிலையாக இருக்க வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் வரும்காலத்தில் பாஜக ஆட்சி காலத்தின் கட்டாயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X