காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள்

Added : மே 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீரை மலர்கள், விதை நெல் மணிகளை தூவி விவசாயிகள் வரவேற்றனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கடந்த 24 ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரை முதல்வர் திறந்து வைத்தார். அந்த நீர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை வழியாக, இன்று திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த
காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள்

திருச்சி: திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீரை மலர்கள், விதை நெல் மணிகளை தூவி விவசாயிகள் வரவேற்றனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கடந்த 24 ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரை முதல்வர் திறந்து வைத்தார். அந்த நீர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை வழியாக, இன்று திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், காவிரி நீருக்கு மலர்கள், விதை நெல் மணிகளை தூவி வரவேற்றனர். இந்த நீர் கல்லணைக்கு சென்றதும் கல்லணையிலிருந்து இன்று மாலை 5 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீர் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு செல்லும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-மே-202218:02:12 IST Report Abuse
வெகுளி எறிந்த தட்டு கண்ணுல பட்டால் பூக்கடைக்காருகிட்ட திருப்பி குடுத்துடுங்கப்பு...
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
27-மே-202216:06:50 IST Report Abuse
Kannan போட்ட தட்டு வநதிடுச்சா...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மே-202215:48:08 IST Report Abuse
Natarajan Ramanathan வீசிய தட்டும் கல்லணைக்கு வந்து சேர்ந்துவிட்டதா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X