யானை உயிரிழப்புக்கு காரணமான நபர் கைது

Added : மே 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்குட்பட்ட தட்டாம்பாறை பகுதியில் தனியார் தேயிலைத்தோட்டத்தில் கடந்த 2021 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ம் தேதி காலை, மின்வேலியில் சிக்கி 4- வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது. விசாரணையில் தோட்ட உரிமையாளர் ஷாஜி என்பவர் குடும்பத்துடன் தலைமறைவானார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் உதவி வனப்பாதுகாவலர்
யானை உயிரிழப்புக்கு காரணமான நபர் கைது

பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்குட்பட்ட தட்டாம்பாறை பகுதியில் தனியார் தேயிலைத்தோட்டத்தில் கடந்த 2021 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ம் தேதி காலை, மின்வேலியில் சிக்கி 4- வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது. விசாரணையில் தோட்ட உரிமையாளர் ஷாஜி என்பவர் குடும்பத்துடன் தலைமறைவானார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் உதவி வனப்பாதுகாவலர் கிருபாகரன் தலைமையில், வனவர் ஜார்ஜ்பிரவீன்சன், வனக்காப்பாளர் ராமச்சந்திரன்,ஓட்டுநர் சந்தீப் ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அதில் கேரளா மாநிலம் மஞ்சேரி பகுதியில் ஷாஜி தலைமறைவாக இருப்பதாக கேரளா மாநில போலீசார் மூலம் தகவல் கிடைத்தது. திருப்பாஞ்சி என்ற இடத்திற்கு சென்ற வனக்குழுவினர் ஷாஜி கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yesappa - Bangalore,இந்தியா
30-மே-202213:24:45 IST Report Abuse
Yesappa ஷாஜி சிறுபான்மை இனத்தவர்.. ஆகவே அவரை மன்னித்து விடவேண்டும். திருமா கோரிக்கை
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-மே-202220:13:41 IST Report Abuse
Vena Suna இவனை யானையை மிதிக்க வைத்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மே-202215:46:38 IST Report Abuse
Natarajan Ramanathan அவனையும் மின்சார நாற்காலியில் கட்டி வைத்து மின்சாரம் பாய்ச்சி கொல்லவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X