டில்லி: கொரோனா காலம் முடிந்துள்ள நிலையில் கடந்த ஏப்., மாத நிலவரப்படி அதீத உள்நாட்டு இறக்குமதி காரணமாக இந்திய வர்த்தகப் பற்றாக்குறை சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவருகிறது. அதேசமயத்தில் மக்களின் தேவைகள் கொரோனாவுக்கு முன்னர் இருந்ததைப்போல மீண்டும் அதிகரிக்கத் துவங்கிவிட்டது.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வழக்கம்போல வாங்கிவரும் நிலையில் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் வாடிக்கையாளர் பொருள் தேவை காரணமாக இந்த ஆண்டு இறக்குமதி மதிப்பு 60.3 பில்லியன் அமெரிக்க டாலர் உள்ள நிலையில் இறக்குமதி 31 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

இதனால் கடந்த மார்ச் மாதம் 18.5 பில்லியன் ஆக இருந்த வர்த்தக பற்றாக்குறை தற்போது மேலும் அதிகரித்து தற்போது 20.1 பில்லியன் ஆகியுள்ளது. மின்சாரத்துறை மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சி பிப்., மாதம் 1.5 சதவீதம் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 1.9 சதவீதம் ஆகியுள்ளது. எட்டு கட்டுமான தொழில் துறைகளது வளர்ச்சி கடந்த பிப்., மாதம் 6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE