பொங்கலுார் : கொடுவாயில் பிளாஸ்டிக் குப்பைகளை நதியில் கொட்டுவதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.பல்லடம் அடுத்த கேத்தனுார் பகுதியில் உருவாகும் காம்பிலி நதி கொடுவாய் வழியாக செல்லும்போது நிழலிக்கரை என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.
இது வெள்ளகோவிலில் அமைந்துள்ள வட்டமலைக்கரை அணையை அடைந்து அதை நிரப்பி விட்டு பின் அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது.பல ஆண்டு காலமாக வட்டமலை கரை அணை வறண்டு கிடந்தது. இதற்குப் பி.ஏ.பி., நீரை திறந்து விட வேண்டும் என்று வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் போராடி வந்தனர். இந்த ஆண்டுதான் பி.ஏ.பி., உபரியாக உள்ள தண்ணீர் திறந்துவிடப்பட்டு அணை நிரப்பப்பட்டுள்ளது.
இந்த நதியின் அருகில் கொடுவாய் சக்தி விநாயகபுரம் சாய்ராம் நகர் உள்ளது. சாய் ராம் நகரில் சேகரமாகும் மொத்த பிளாஸ்டிக் குப்பைகளையும் இந்த நதியில் கொட்டி வருகின்றனர்.இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி தண்ணீரை நாசமாக்கவா ஒரு தலைமுறை போராடி தண்ணீரை பெற்றோம் என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE