தாலுகா அலுவலகங்களில் ஆய்வு; தலைமைச் செயலர் உத்தரவு

Updated : மே 27, 2022 | Added : மே 27, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: 'மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், தாலுகா அலுவலக செயல்பாடுகளை ஆய்வு செய்து, குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்' என, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.பிரச்னைகள்அனைத்து மாவட்டங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு எழுதிஉள்ள கடிதம்:மக்கள் நலத்திட்டங்களை


சென்னை: 'மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், தாலுகா அலுவலக செயல்பாடுகளை ஆய்வு செய்து, குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்' என, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news





பிரச்னைகள்


அனைத்து மாவட்டங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு எழுதிஉள்ள கடிதம்:மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, வருவாய் நிர்வாகம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறது.பட்டா மாற்றம், நிலம் உட்பிரிவு, பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் போன்றவை, தாலுகா அலுவலகம் வழியே செயல்படுத்தப்படுகின்றன.


latest tamil news


ஆனால், மக்களுக்கு சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. முதல்வர் சமீபத்தில், சென்னை கிண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது, பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தது. எனவே, கண்காணிப்பு அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில், தாலுகா அலுவலகப் பணிகளை, விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் ஆகியவை கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

சான்றிதழ்களை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருந்தால், நிராகரிப்புக்கான காரணம் சரியா என்று, பார்க்க வேண்டும்.நிலுவைமுதியோர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் சிலவற்றை தேர்வு செய்து, காரணம் உண்மையா என ஆய்வு செய்ய வேண்டும்.பட்டா மாற்றம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால், அதற்கான காரணத்தை கேட்டறிய வேண்டும்.

பட்டா மாற்றம் செய்வதில் அதிக தாமதம் ஏற்படுகிறது. உட்பிரிவு தேவைப்படாத விண்ணப்பங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுத்து, பட்டா வழங்க வேண்டும்.ஆய்வு குறித்த விபரங்களை, வருவாய் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
28-மே-202210:50:24 IST Report Abuse
நக்கீரன் அய்யா உங்கள் உத்தரவு இதுதான் மதிக்கப்பட்டிருக்கிறது, இதை மதிப்பதற்கு? இதுவும் பத்தோடு பதினொன்றுதான். ஏற்கனவே புதிய ரோடுகளை போடும்போது பழைய ரோடுகளை மில்லிங் செய்த பின்பே போட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தீர்கள். எவன் மதித்தான்? மதிக்காதவர்களுக்கு என்ன தண்டனை அளித்தீர்கள்? தப்பு செய்வோரை தண்டித்தால் மட்டுமே தப்புகள் மீண்டும் நடக்காது. ஆனால், நீங்கள் அவர்களை வெறும் இடமாற்றம் மட்டுமே செய்கிறீர்கள். இது என்ன நியாயம் என்று தெரியவில்லை. அது எந்த சட்டத்தில் உள்ளது என்றும் தெரியவில்லை. அதனால், மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அரசு ஊழியர்கள் ஆட்டம் போடுகிறார்கள். மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு கிம்பளமும் வாங்கி கொளுத்துக்கிடக்கிறார்கள். உங்களுக்கு உழைத்து கொட்டும் நாங்கள் திண்டாடுகிறோம். என்ன செய்வது?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-மே-202208:30:31 IST Report Abuse
Girija முதலில் சி எம் செல் தொலை பேசி ஐ ஆய்வு செய்யுங்கள் , பழைய கொரோனா மெசேஜ் தான் வருகிறது, மேலும் அட்டெண்டட் பண்ணி சரியான தகவலை தர முடியவில்லை என்றால் போன் எதற்கு ? துறை தலைவர் அலுவலக போன் ரிசிவர் கீழே எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் இந்த ஒரு நம்பர் தான் கொடுக்க பட்டுள்ளது . கால் சென்டரில் சரியான தகவல்கள் கிடைப்பதில்லை .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-மே-202206:53:35 IST Report Abuse
Kasimani Baskaran அலுவலகத்தில் காமிரா போட்டு பொது மக்கள் இணையத்தில் பார்க்கும் அளவில் வசதி செய்தாலேயே இவர்கள் திருந்தி விடுவார்கள். இல்லை என்றால் லஞ்சம் கொடுப்பவனையும், வாங்குபவனையும் திருத்த முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X