சென்னை : 'தாஜ்மஹால் எங்களுடையது; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உங்களுடையது' என, கமல் கூறியுள்ளார். கமல் தயாரித்து நடித்த, 'விக்ரம்' படம், ஜூன், 3ல் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.
இதற்காக நாடு முழுதும் கமல் சுற்றுப் பயணம் செய்து, படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.இதுவரை இல்லாத அளவுக்கு படம் வியாபாரமாகி உள்ள நிலையில், படத்திற்காக, மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களில் இறங்கி உள்ளனர். டில்லியில் படத்தை விளம்பரப்படுத்த சென்ற கமலிடம், இந்தியாவின் வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கமல், 'நான் ஒரு இந்தியன். என்னைப் பொறுத்தவரை தாஜ்மஹால் என்னுடையது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உங்களுடையது. கன்னியாகுமரி எந்த அளவுக்கு உங்களுக்கு சொந்தமோ, அதே அளவுக்கு காஷ்மீர் எனக்கு சொந்தம்' என்று கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE