'வாய்தா' படத்திற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

Added : மே 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: 'வாய்தா படத்தை தடை செய்ய வேண்டும்' என, கோவை வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மகிவர்மன் இயக்கத்தில், புகழ் மகேந்திரன், நாசர், மு.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்த, வாய்தா படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று படத்தை பார்த்த கோவை வழக்கறிஞர்கள், 'படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது ஆட்சேபனைக்குரிய


சென்னை: 'வாய்தா படத்தை தடை செய்ய வேண்டும்' என, கோவை வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மகிவர்மன் இயக்கத்தில், புகழ் மகேந்திரன், நாசர், மு.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்த, வாய்தா படம் நேற்று வெளியானது.

இப்படத்திற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று படத்தை பார்த்த கோவை வழக்கறிஞர்கள், 'படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்' என நெருக்கடி கொடுத்துள்ளனர்.இது குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது:வாய்தா படத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையை பற்றி மோசமாக சித்தரித்துள்ளனர்.

'நீதி, பணக்காரர்களுக்கு மட்டுமே; ஏழைகளுக்கு இல்லை' என்று காட்சிப்படுத்தி உள்ளனர். சில காட்சியில், வழக்கறிஞர்களை தரக்குறைவாக காட்டியுள்ளனர். இந்த மாதிரியான படங்களுக்கு பதில், விழிப்புணர்வு தரும் வகையில், அதற்கான சட்டப் பிரிவை பயன்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கலாம். இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

இல்லையேல், ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும். இப்படத்தால் நீதித்துறை மீதான மரியாதை பொதுமக்களிடம் குறையும். இதுபோன்ற காட்சிகளை மற்ற படங்களிலும் பயன்படுத்த கூடாது என்பதே எங்கள் விருப்பம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
28-மே-202211:44:35 IST Report Abuse
raja உண்மையை சொன்னா ஏன் இந்த பொய்யுரைப்பவர்களுக்கு கோபம் வருகிறதே... ஓஹோ இவர்கள் வக்கீல் வண்டு பாரதி கூட்டமோ......
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
28-மே-202208:32:04 IST Report Abuse
நல்லவன் தங்களோட "நிதி"க்கு ஒரு பிரச்சனைன்னா "நீதி"யே பார்க்காதவர்கள் - நீதிக்காக வழக்கு விசித்திரமற்றது.
Rate this:
Cancel
28-மே-202208:15:12 IST Report Abuse
ந சசிகுமார் ஒருசில ஆட்கள் செய்யும் தவறுக்கு அனைவரின்மீதும் சந்தேகம் வருவது இயல்புதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X