உத்தர கன்னடா : ஐ.என்.எஸ்., கந்தேரி நீர்மூழ்கி கப்பலில் முதல் முறையாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்து, கடலோர பாதுகாப்பை ஆய்வு செய்தார். இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கர்நாடகா வந்துள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் கார்வாரில் உள்ள கதம்பா கடற்படை தளத்துக்கு வந்தார்.சுதந்திர இந்தியாவின், 75வது ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று காலை சூரியோதயத்தின் போது, காமத் கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்தார்.
பின், 2019ல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட, ஐ.என்.எஸ்., கந்தேரி நீர்மூழ்கி கப்பலில் பயணித்து, அரபி கடலில் கடலோர பாதுகாப்பை ஆய்வு செய்தார். கடலுக்கு அடியில் ஒரு மணி நேரம் பயணித்து, அதிநவீன வசதிகள் கொண்ட நீர்மூழ்கி கப்பலின் போர் திறன் குறித்து வீரர்களிடம் தகவல் பெற்றார்.''நீர்மூழ்கி கப்பல் பயணத்தில், அற்புதமான, சிலிர்ப்பான அனுபவம் கிடைத்தது,'' என அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE