சென்னை : பிரதமர் நரேந்திரமோடி - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சந்திப்பு, பன்னீர்செல்வம் வரவேற்பு காட்சிகளை, அ.தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில், அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
அரசு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். விமான நிலையத்தில், பிரதமரை வரவேற்பதற்காக, கவர்னர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் வரிசையாக நின்றனர்.விமான நிலையத்தில் இருந்து இறங்கிய பிரதமர், கவர்னர் மற்றும் அமைச்சர்களை வணங்கியபடி, நேராக பழனிசாமி அருகே சென்று, அவர் கைகளை பிடித்தபடி நலம் விசாரித்தார்.
அவரும் மகிழ்ச்சி பொங்க பதில் அளித்தார். இதை அமைச்சர்கள் வேடிக்கை பார்த்தனர்.இந்த வீடியோவை, அ.தி.மு.க.,வினர் அதிக அளவில், சமூக வலைதளங்களில் பகிர்ந்து, 'மரியாதையை தேடி போய் வாங்கக் கூடாது; தானாக கிடைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். அதேபோல, ஐ.என்.எஸ்., அடையார் கடற்படை தளத்தில், பிரதமரை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்று, திருக்குறள் புத்தகம் பரிசளித்தார். அதை பெற்றுக் கொண்ட பிரதமர், அவரது தோளில் தட்டிக் கொடுத்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படத்தையும், அ.தி.மு.க.,வினர் பகிர்ந்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE