தேசிய கல்விக் கொள்கை புரட்சியை உருவாக்கும்; கருத்தரங்கில் கவர்னர் ரவி பெருமிதம்

Added : மே 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருவாரூர் : ''தேசிய கல்விக்கொள்கை கல்வி புரட்சியை உருவாக்கும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.திருவாரூர் மத்திய பல்கலையில் நேற்று தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது. கவர்னர் ரவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, கல்வி புரட்சியை உருவாக்கும். பல அரசுகளால் மறைக்கப்பட்ட
தேசிய கல்விக் கொள்கை புரட்சியை உருவாக்கும்;  கருத்தரங்கில் கவர்னர் ரவி பெருமிதம்


திருவாரூர் : ''தேசிய கல்விக்கொள்கை கல்வி புரட்சியை உருவாக்கும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.திருவாரூர் மத்திய பல்கலையில் நேற்று தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது. கவர்னர் ரவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, கல்வி புரட்சியை உருவாக்கும். பல அரசுகளால் மறைக்கப்பட்ட பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கும்.உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம், 40 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில் படிப்படியாக அழிக்கப்பட்டது.

இந்திய மக்களின் உழைப்பு, தளவாடங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டினர், அவர்களது நாட்டிற்கு கொண்டு சேர்த்தனர்.ஆங்கிலேயர் கால கல்விக் கொள்கையை, 75 ஆண்டுகளுக்கு பின், தற்போது சீர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா என்ற அகண்ட பாரதம், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. வேற்றுமையை, வேற்றுமையாக பார்க்கும் நிலை சமீப காலமாக அதிகரித்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மக்கள் நலன் பயக்கும் வகையில், பல திட்டங்களை வகுக்கின்றனர். ஆனால், அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் செயல்படுத்துகின்றனர். இதனால், திட்டங்களின் இலக்கை அடைய முடியவில்லை.இங்கு நடக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம், இதற்கான தெளிவை உருவாக்கும் அடித்தளமாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், காணொலி காட்சி வாயிலாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் உட்பட பலர் பேசினர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
28-மே-202215:37:27 IST Report Abuse
krish கசடற கற்க, அறிவியல், ஆராய்ச்சி, ஆக்க பூர்வமான அறிவியல் ஆராய்ச்சி, சுயசிந்தனைக்கு ஊன்றுகோல் தாய்மொழி. மறுக்க இயலாது. ஆனாலும் இன்றைய வாழ்வில், ஆங்கில ஆதிக்கம் அதிகம், இது நிதர்சனம். மறுப்பதற்கு இல்லை. எனவே, பிற ஆராய்ச்சிகளை பயில, நுகர ஆங்கில படிப்பு அவசியம் ஆகிறது. அதே சமயம், சுயசிந்தனைக்கு வித்திட தாய்மொழிக்கே பிரதானம். முக்கியத்துவம். ஆக்க பூர்வகமாக சிந்திக்க தாய்மொழி, சுயமாக தாய்மொழியில் சிந்தித்து திறம்பட ஒரு சீரிய அறிவுசார் பொருளை உருவாக்கி, பரிமாணத்தை அடைந்த பின், அதை முன்னேற்றி, முழுமையாக செயல்படுத்த அடிப்படை ஆங்கிலம்.அறிவு அவசியமாகிறது/. . ,
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
28-மே-202212:28:06 IST Report Abuse
J. G. Muthuraj ஆங்கிலேயர் கால கல்விக்கொள்கை அஸ்திபாரம் தான் சர்வதேச அரங்கிற்கு இந்தியாவை கொண்டு சென்றது....தொழில் வளர்ச்சிக்கு உதவியது....வளர்ந்த நாடுகளோடு 'கம்பீட்' பண்ணினோம்....ஆங்கிலத்தை முடக்கிவிட்டால், நாடு ஓரிரு துறைகளை தவிர மற்ற எல்லா துறைகளிலும் பின்தங்கும் அல்லது முன்னேற்றம் காண மிகவும் போராட வேண்டியிருக்கும்...ஆங்கிலேய கல்விக்கொள்கையை திருத்துங்கள்/புதுப்பியுங்கள்....அதை முற்றிலும் கைவிடுவது வளரும் நாட்டிற்கு உகந்ததல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X