1 ரூபாய் சம்பளத்தில் அண்ணாமலை நடித்த 'அரபி'

Added : மே 28, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நடித்த, அரபி கன்னடப் படம், விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் முன்னோட்டம், இன்று வெளியாகிறது.சர்வதேச புகழ்பெற்ற, 'பாரா' நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ், 29, பயிற்சி பெற்ற நடனக் கலைஞராகவும் உள்ளார். இவர் 10 வயதில், மின் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தார். இதில், அவரது தந்தை உயிரிழந்தார். கடந்த, 2009ல் தாயையும் இழந்த விஸ்வாஸ், நீண்ட கால பயிற்சி
 1 ரூபாய் சம்பளத்தில்  அண்ணாமலை நடித்த 'அரபி'


சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நடித்த, அரபி கன்னடப் படம், விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் முன்னோட்டம், இன்று வெளியாகிறது.சர்வதேச புகழ்பெற்ற, 'பாரா' நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ், 29, பயிற்சி பெற்ற நடனக் கலைஞராகவும் உள்ளார்.

இவர் 10 வயதில், மின் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தார். இதில், அவரது தந்தை உயிரிழந்தார். கடந்த, 2009ல் தாயையும் இழந்த விஸ்வாஸ், நீண்ட கால பயிற்சி மற்றும் நம்பிக்கையால், தொழில் முறை நீச்சல் வீரராக மாறினார். இந்தியாவுக்காக, பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.கன்னட இயக்குனர் ராஜ்குமார், விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை படமாக, அரபி என்ற பெயரில் படமாக்கி உள்ளார்.

இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக, அவர் 1 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். படத்தின் கதையை கேட்டதுமே, நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர், அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
28-மே-202216:53:07 IST Report Abuse
sankar ....
Rate this:
Cancel
Nellai Ravi - Nellai,இந்தியா
28-மே-202210:17:04 IST Report Abuse
Nellai Ravi தமிழகத்திற்கு முதல்வராகும் தகுதி அண்ணாமலைக்கு வந்து விட்டது.
Rate this:
Cancel
suresh - Chennai,இந்தியா
28-மே-202208:33:47 IST Report Abuse
suresh ரொம்ப அவசியமான செய்தி. அண்ணாமலைக்கு முட்டு குடுக்கிறத தவிர்க்கவும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
28-மே-202211:43:00 IST Report Abuse
rajaஏன் அந்த விடியா மூஞ்சி செய்தின்னா தான் அவசியமான செய்தியா... அப்படின்னா நீ அந்த கழிவறை பேப்பேரைத்தான் படிக்கணும்.........
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
28-மே-202212:28:35 IST Report Abuse
TamilArasanநீ இன்னும் நல்லா கதறி ஒப்பாரி வை......
Rate this:
Anand - chennai,இந்தியா
28-மே-202212:57:36 IST Report Abuse
Anandஅதானே, தலைவனை பற்றிய நியூஸை மட்டுமே போட வேண்டும். அவனுக்கு முட்டுக் கொடுத்தால் தான் இருநூறு ரூவா ஊழியம் கிடைக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X