355 ஊராட்சிகளில் சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம்! ரூ.12 கோடியில் 1,159 பணிகள்| Dinamalar

355 ஊராட்சிகளில் சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம்! ரூ.12 கோடியில் 1,159 பணிகள்

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (1) | |
செங்கல்பட்டு,-செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளில், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு நிதியின் கீழ் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,159 பணிகள் நடந்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

செங்கல்பட்டு,-செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளில், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு நிதியின் கீழ் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,159 பணிகள் நடந்து வருகின்றன.latest tamil newsசெங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் 15வது நிதி குழு மானியத்தில், கிராம ஊராட்சியில் வரையறுக்கப்பட்ட 60 சதவீதம் நிதியிலிருந்து, சுகாதார பணிகளும், 30 சதவீதம் நிதியில் சாம்பல் நீர் மேலாண்மை பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளன.

அனைத்து ஊராட்சிகளையும் துாய்மைாக மாற்ற, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த திட்டத்தில், ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேமிக்க தனி நபர் உறிஞ்சி குழி அமைக்கப்படுகிறது.மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி, மினி டேங்குகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமிக்க, சமுதாய உறிஞ்சி குழிகள் அமைக்கப்படுகின்றன.'இ - காட்' வாகனம்ஊராட்சிகளில், வீடுகளில் இருந்து சேகரமாகும்குப்பையை வாங்க, புதிதாக மூன்று சக்கர மிதிவண்டி, தள்ளுவண்டி, பேட்டரியில் இயங்கக்கூடிய 'இ - காட்' வாகனம் வாங்கப்பட உள்ளன.வீடுகளிலிருந்து சேகரமாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்க, கூடம் அமைத்தல், பழுதுபார்த்தல், உரக்குழிகள், மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.இத்திட்ட பணிகளை செயல்படுத்த, இந்த ஆண்டு, 12.06 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsஇப்பணிகளை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.இப்பணிகளை செய்வதற்கு, ஊராட்சிகளில் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.பெயர் வெளியிடாத ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், 15வது நிதி குழு மானிய திட்டத்தில், 355 ஊராட்சிகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மொத்தம் 1,159 பணிகள் செய்யப்பட உள்ளன.வரையறுக்கப்பட்ட நிதியில் சுகாதார பணிகளும், வரையறுக்கப்படாத நிதியில் மற்ற வளர்ச்சி பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X