கிரிக்கெட் சங்கத்தில் ஊழல்'மாஜி' முதல்வருக்கு 'சம்மன்'

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அவருக்கு, 'சம்மன்' அனுப்பி உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, இவர், அம்மாநில கிரிக்கெட் சங்க
கிரிக்கெட் சங்கம் , ஊழல்'மாஜி' முதல்வருக்கு 'சம்மன்'

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அவருக்கு, 'சம்மன்' அனுப்பி உள்ளது.


ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, இவர், அம்மாநில
கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்தார். அப்போது, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நியமனத்தில் ஊழல் நடந்ததாகவும், அதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் புகார் எழுந்தது.


latest tamil news




இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், ஏற்கனவே 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பரூக் அப்துல்லாவின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்நிலையில், 31ல் டில்லியில் உள்ள அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பரூக் அப்துல்லாவுக்கு, அமலாக்கத் துறை நேற்று சம்மன் அனுப்பியது.
இது குறித்து, தேசிய மாநாட்டு கட்சியினர் கூறியதாவது:நாட்டில் உள்ள எல்லா எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்புகின்றன. அந்த வரிசையில் பரூக் அப்துல்லாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்லும்படி வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-மே-202216:58:17 IST Report Abuse
Lion Drsekar வடிவேலு மொழியில் கூறவனேடும் என்றால் " அவனா இவன் " இதற்க்கு மேல் பாகிஸ்தான் நட்டு மக்களைப்பற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லை, வாழ்ந்ததது , பாகிஸ்தானுக்கு உண்டது இந்திய வரிப்பணத்தில் உண்பது பாதுகாப்பாக இருப்பது இந்திய வரிப்பணத்தில் , கண்டிப்பக இவர்கள் இருக்குமிடம் ..... இருக்கும் வந்தே மாதரம்
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
28-மே-202216:35:33 IST Report Abuse
Rafi பணம் கொழிக்கும் சங்கத்தில் வாரிசு தான் தலைவர், அவர் மீது யாரும் எதிர் பார்க்கமுடியாத அளவில் முதலீட்டை போல் பன்மடங்கு வருவாய் பெருக்கிய குற்றசாட்டு ஏற்கனவே இருக்கு. ஏதாவது கிடைக்குமா என்று தான் சுதந்திரமான???? அமலாக்கு துறை முயற்சி செய்கின்றார்கள், யார் யாரையென்று தன்னிச்சையாக முடிவு செய்து தான் அமலாக்க துறை விசாரணை வளையத்திற்கு கொண்டு வருகின்றார்கள் என்று நம்ப வேண்டும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-மே-202215:55:07 IST Report Abuse
sankaseshan ஜம்மு காஷ்மீரில் அடிக்கப்பட்ட கொள்ளையில் காங்கிரசுக்கும் NC க்கும் சம பங்குண்டு இருவரும் கூட்டு களவாணிகள் இது நேரு காலத்திலேயே தொடங்கிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X