இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் திட்டம்1,243 பேருக்கு ரூ.1.21 கோடி மதிப்பில் சிகிச்சை கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Added : மே 28, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும்-48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுபவர்களை கலெக்டர் ஸ்ரீதர் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.அப்போது அவர் கூறியதாவது:சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விபத்தில்



கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும்-48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுபவர்களை கலெக்டர் ஸ்ரீதர் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.அப்போது அவர் கூறியதாவது:சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.தமிழகத்தில் 224 அரசு மருத்துவமனைகள், 441 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 665 மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 18ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,243 பேர் சாலை விபத்துகளினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 1,087 பேருக்கு இலவசமாக சி.டி., ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒரு கோடியே 21 லட்சத்து 63 ஆயிரத்து 685 ரூபாய் மதிப்பிலான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 665 மருத்துவமனைகளில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.மருத்துவமனை நிலைய மருத்துவர் அனுபாமா, கண்காணிப்பாளர் நேரு, கூடுதல் நிலைய மருத்துவர் பழமலை, பொற்செல்வி, கணேஷ் ராஜா மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X