இசைஞானி இளையராஜா நேரடியாக பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி, ஜூன் 2ம் தேதி நடக்கிறது.பீளமேடு, 'கொடிசியா' வளாகத்தில் நடக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜாவுடன் பிரபல பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஊடக பங்கு தாரராக, 'தினமலர்' நாளிதழ் கரம் கோர்க்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச நுழைவு டிக்கெட் பெற்று, இளையராஜா கரங்களால் பரிசு பெற வாசகர்களுக்கு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. அதற்கான போட்டியே இது!இசைஞானி இசையமைத்த படங்கள் மற்றும் ஆல்பம் தொடர்பாக கேள்வி கேட்கப்படும்.சரியான விடை மற்றும் இசைஞானியை போற்றும் விதமாக, 10 வார்த்தைகளுக்குள் அருமையான வாசகம் எழுதி, வாசகர்கள் தமது மொபைல் எண்ணுடன் cbeevents @ dinamalar.in என்ற, இ-மெயில் முகவரிக்கு, மே 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.சரியான விடை, சிறந்த வாசகம் அனுப்பும் வாசகர்களில், 10 பேருக்கு இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டும், மேடையில் பரிசும் வழங்கப்படும். வெற்றியாளர் விவரம் ஜூன் முதல் தேதி,'தினமலர்' நாளிதழில் வெளியாகும்.

போட்டிக்கான கேள்வி...
''நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்'' என்ற, 'அன்பே வா' படப்பாடலின் சாயலில் எனக்கு ஒரு பாட்டு வேணும் என்று கேட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு இசைஞானி இசையமைத்து தந்த பாடல் எது? என்ன படம்?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE