வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ''ஹிந்துக்களுக்கு விரோதம் இல்லாமல் தி.மு.க., அரசு நடக்க வேண்டும்,'' என மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்துாரில் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தரிசனம் செய்த அவர் மேலும் கூறியதாவது:
பழனியில் ஆரத்தி விழா நடத்த அதிகாரிகள் விடவில்லை. இது பெரிய தவறு. ஆரத்தி எடுப்பது ஹிந்துக்கள் உரிமை. மற்ற மதங்களுக்கு ஆதரவாக இருந்து விட்டு ஹிந்துக்களை அவ மதிக்காதீர்கள். ஹிந்து கோயில் சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளியுங்கள்.
ஹிந்து விரோதமாக நடக்காதீர்கள். செய்யாதீர்கள், செய்தால் நடக்க விடமாட்டோம்.
குஜராத்தில் பல்கலை வேந்தராக முதல்வர் இருப்பதை முன்னுதாரணமாக கூறும் தி.மு.க.,, அங்குள்ள பசுவதை தடை சட்டத்தை போல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். யூடியூப் சேனல்களில் தவறான கருத்துகளை பதிவிடும் தீவிரவாதிகளையும், தேசத்துரோகிகளையும் நெருங்க இந்த அரசாங்கம் பயப்படுகிறது. -என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE