சென்னையில் கருணாநிதி சிலை : இன்று திறக்கிறார் வெங்கையா நாயுடு

Added : மே 28, 2022 | கருத்துகள் (55) | |
Advertisement
சென்னை :சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். 12 அடி உயரம் மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், அரசு பன்னோக்கு உயர்
சென்னை, கருணாநிதி சிலை , இன்று, வெங்கையா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை :சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.


12 அடி உயரம்


மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில், இரண்டு கிரவுண்ட் நிலத்தில், கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.


latest tamil news





இந்த சிலைக்கான பீடம் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. சிலைக்கு அஞ்சலி செலுத்த வருவோர் நடந்து செல்ல, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை, தமிழ் வளர்ச்சித் துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்த, 1.70 கோடி ரூபாய் நிதியில், பொதுப்பணித் துறையினர் செய்து முடித்துள்ளனர்.


மாலை 5:30 மணி



கருணாநிதி சிலை திறப்பு விழா, இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைக்க உள்ளார்.சிலை திறப்பு முடிந்த பின், கலைவாணர் அரங்கில் விழா நடக்கிறது. வெங்கையா நாயுடு, ஸ்டாலின் ஆகியோர் பேச உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
28-மே-202218:02:46 IST Report Abuse
spr "Ozymandias" என்றொரு கிரேக்க மன்னனைக் குறித்து ஷெல்லி என்பவர் எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வந்தால் நல்லது. குடியரசு தலைவர்கள் ஆளுநர்கள் இவர்களுக்கெல்லாம் இது போல சிலை திறப்பது விழாவில் பங்கேற்பது இவையெல்லாம்தானே பணி அதிலும் ஊழல் நடக்குமிடத்தில் இந்தப் பெரிய மனிதர்கள் பங்கேற்றால் அந்த இடமே புனிதமாகிவிடும் வழக்குகள் எதுவானாலும் வாபஸ் ஆகிவிடும் கொள்ளையடிப்பதுவும் குற்றமென்றாகி விடாது என்றுதானே இதுவரையில் பார்த்திருக்கிறோம் ஆனால் அவர்கள் தலையெழுத்து மறுக்கவும் முடியாது
Rate this:
Cancel
Balakrishnan - Kanyakumari,இந்தியா
28-மே-202217:54:51 IST Report Abuse
Balakrishnan ஊழலின் தந்தையாக போற்றப்படுpavaனுக்கு சிலை ஒரு கேடு
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
28-மே-202217:40:02 IST Report Abuse
Velumani K. Sundaram கர்மவீரர் வாஜ்பாயி அவர்களின் ஆட்சிக்கு துணைநின்ற கருணாநிதிக்காக இந்த நன்றிச்செயலை செய்கிறார் துணை ஜனாதிபதி. கருணாநிதிக்கு பாரதரத்னா விருதுக்கு காசுவாங்கிய MP க்கள் பரிந்துரைத்த அப்ளிகேஷனை குப்பைத்தொட்டியில் தூக்கிவீசியவர் காலம் சென்ற நம் இந்திய தேசத்தந்தை அப்துல் காலம் ஐயா. பிரதமராக கனவுகண்ட சோனியாவை மன்மோகனுக்கு சொம்புத்தூக்க வைத்து நம் பாரத தேசத்தின் மாட்சிமையை போற்றியவரும் தேசத்த்தந்தை காலம் அவர்களே. இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும், கலாம் ஐயாதான் முதற்கடவுள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X