சென்னையில் கருணாநிதி சிலை : இன்று திறக்கிறார் வெங்கையா நாயுடு| Dinamalar

சென்னையில் கருணாநிதி சிலை : இன்று திறக்கிறார் வெங்கையா நாயுடு

Added : மே 28, 2022 | கருத்துகள் (55) | |
சென்னை :சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். 12 அடி உயரம் மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், அரசு பன்னோக்கு உயர்
சென்னை, கருணாநிதி சிலை , இன்று, வெங்கையா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை :சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.


12 அடி உயரம்


மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில், இரண்டு கிரவுண்ட் நிலத்தில், கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.


latest tamil news





இந்த சிலைக்கான பீடம் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. சிலைக்கு அஞ்சலி செலுத்த வருவோர் நடந்து செல்ல, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை, தமிழ் வளர்ச்சித் துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்த, 1.70 கோடி ரூபாய் நிதியில், பொதுப்பணித் துறையினர் செய்து முடித்துள்ளனர்.


மாலை 5:30 மணி



கருணாநிதி சிலை திறப்பு விழா, இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைக்க உள்ளார்.சிலை திறப்பு முடிந்த பின், கலைவாணர் அரங்கில் விழா நடக்கிறது. வெங்கையா நாயுடு, ஸ்டாலின் ஆகியோர் பேச உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X