வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: புதிய அனல் மின் நிலையங்களுக்கு, 500 கோடி கிலோ நிலக்கரி வாங்க, 'சிங்கரேணி கோலரிஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, மின் வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
'வட சென்னை - ௩' என்ற பெயரில், திருவள்ளூர் மாவட்டத்தில், 800 மெகா வாட் திறன் மற்றும் ராமநாதபுரம், உப்பூரில் தலா, 800 மெகா வாட் திறனில், புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. வட சென்னை - ௩ மின் நிலையத்தில், செப்டம்பருக்குள் உற்பத்தி துவக்கப்பட உள்ளது.
ஏற்கனவே உள்ள ஐந்து அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி, ஒடிசாவில் உள்ள மத்திய அரசின், 'தால்சர், ஐ.பி.வேலி' சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. அதுவே பற்றாக்குறையாக இருப்பதால், புதிய நிலையங்களுக்கு வேறு இடங்களில் வாங்க முடிவு செய்யப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில், 'சிங்கரேணி கோலரிஸ்' நிறுவனத்திற்கு, நிலக்கரி சுரங்கம் உள்ளது. இது, மத்திய நிலக்கரி அமைச்சகம் மற்றும் தெலுங்கானா மாநில அரசின் கூட்டு நிறுவனம்.
வட சென்னை - 3 மற்றும் உப்பூர் அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுக்கு, 500 கோடி கிலோ நிலக்கரியை, சிங்கரேணி கோலரீஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, சிங்கரேணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய, மின் வாரியத்திற்கு, அதன் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. அக்குழுவில், தமிழக அரசின் நிதி, தொழில், எரிசக்தி துறை செயலர்கள், இயக்குனர்களாக உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE