27.45 கோடி வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு : உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :'மாநிலங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 27.45 கோடி அமைப்பு சாரா மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா போன்ற பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காலகட்டங்களில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு, நேரடி பணப் பலன்கள் மற்றும் இதர அரசு
27.45 கோடி ,தொழிலாளர்கள் பதிவு, உச்ச நீதிமன்றe மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி :'மாநிலங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 27.45 கோடி அமைப்பு சாரா மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா போன்ற பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காலகட்டங்களில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு, நேரடி பணப் பலன்கள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்கள் வழங்க மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, சமூக ஆர்வலர்கள் மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வெளி மாநில தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய - மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு ஜூனில் பல்வேறுஉத்தரவுகளை பிறப்பித்து உத்தரவிட்டது.


latest tamil news
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு மத்திய - மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இதையடுத்து மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''மாநிலங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தேசிய தகவல் மையத்துடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 27.45 கோடி அமைப்பு சாரா மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர்,'' என, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி தெரிவித்தார்.

'பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு எந்த விதமான பலன்கள் அளிக்கப்பட உள்ளன' என, நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை ஜூலை 20க்கு ஒத்திவைத்து

நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-மே-202222:28:41 IST Report Abuse
அப்புசாமி உ.பி, மே.வங்கம்,பிஹார்ல உத்தியோகம் பார்ப்பதை விட தெற்கே கூலி வேலை பாத்து பஞ்சம் பொழைக்கலாம். அங்கே எல்லாம் அவிங்க ஆட்சிதான் நடக்குது.
Rate this:
Cancel
venkatakrishna - Trichy,இந்தியா
28-மே-202214:26:58 IST Report Abuse
venkatakrishna Foriegners about 10 to 12% of our total population of India are residing here without any visa as labourers. whether the foriegn ministry or the home ministry knowingly or unknowningly they are staying. If this situation increases, there may be a chance for creating an internal Security.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
28-மே-202210:16:54 IST Report Abuse
Tamilan தங்கள் நிறுவன கணக்கில் வராத UNKNOWN கலை வைத்துதான் பெரும்பாலான முன்னணி நிறுவனங்களும் நாட்டில் , உலகிலும் வியாபாரம் செயகின்றன . ஒவ்வொரு மாநிலத்தவரும் மற்ற மாநிலங்களில் அடிமையாக இருப்பதையே விரும்புகின்றனர் . மற்ற நாடுகளில் அடிமையாக இருப்பதையே பெருமையாக கருதுகின்றனர். அந்தந்த மாநிலத்திலேயே வேலை செய்தால் மானம் போகும் என்பதாலா , இக்கரைக்கு அக்கறை பச்சை என்பதாலா என்பதை படித்தவர்களும் அரசியல் சட்ட அரசுகளும் மறைத்துவிட்டன .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X