பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு உடனடி தடை: தொழில் துறை வேண்டுகோள்

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
திருப்பூர்: விலை குறைய வாய்ப்பு இல்லாததால், மத்திய அரசு உடனடியாக பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.நடப்பு சீசனில் பருத்தி பஞ்சு விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கேண்டி பஞ்சு விலை, ஒரு லட்சத்து பத்தாயிரத்தை கடந்துள்ளது. பஞ்சு விலையை பின்பற்றி, தமிழக நுாற்பாலைகள் அனைத்து ரக நுால் விலைகளை தொடர்ந்து

திருப்பூர்: விலை குறைய வாய்ப்பு இல்லாததால், மத்திய அரசு உடனடியாக பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

நடப்பு சீசனில் பருத்தி பஞ்சு விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கேண்டி பஞ்சு விலை, ஒரு லட்சத்து பத்தாயிரத்தை கடந்துள்ளது. பஞ்சு விலையை பின்பற்றி, தமிழக நுாற்பாலைகள் அனைத்து ரக நுால் விலைகளை தொடர்ந்து உயர்த்துவதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி உட்பட தமிழகம் முழுவதும் ஜவுளித்துறை பாதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர் பெறமுடியாமல்; ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டருக்கு ஆடை தயாரிக்க முடியாமல் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தவிக்கின்றன.பஞ்சு, நுால் ஏற்றுமதியை தடை செய்யக்கோரி, தொழில் அமைப்பினர் இணைந்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம், இரண்டு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால், ஜவுளித்துறையினருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பியூஸ்கோயல், துறை சார்ந்தோர் பஞ்சு, நுால் ஏற்றுமதியை குறைக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், ஏற்றுமதிக்கு அரசு தடை விதிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அமைச்சர் தெரிவித்தபடி, பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு உடனடி தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
அபரிமிதமான பஞ்சு, நுால் விலைகள், தமிழக ஜவுளித்துறையினரை திக்குமுக்காட செய்கின்றன. நுாற்பாலையை பின்புலமாக கொண்ட பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தப்பித்து கொள்கின்றன. நுால் விலை உயர்வால், குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களே தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.


latest tamil news




புதிய பருத்தி வரத்து துவங்க ஆறு மாதங்களாகி விடும். இறக்குமதி பஞ்சு வந்து சேர, மூன்று மாதமாகி விடும். பஞ்சு, நுால் விலைகள் குறைவதற்கான வாய்ப்பு இல்லை; உயரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மத்திய ஜவுளி அமைச்சர், பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.இதனால், மட்டுமே பஞ்சு, நுால் விலைகள் சீராக வாய்ப்பு உள்ளது. தாமதித்தால், ஏராளமான குறு, சிறு நிறுவனங்கள் ஆடை உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படும்; தொழிலாளர் வேலை இழக்கும் அபாய நிலை உருவாகும்.

அதேபோல், வெறும் அறிவிப்பாக இல்லாமல், நுாற்பாலைகள், வர்த்தகர்கள் பதுக்கியுள்ள பஞ்சு குறித்த விவரங்களை, தமிழக அரசு விரைந்து சேகரிக்க வேண்டும். பதுக்கல் பஞ்சை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
28-மே-202217:39:06 IST Report Abuse
J.Isaac அண்ணாமலை இதற்கு போராட்டம் நடத்தினால் நல்லது.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
28-மே-202213:33:04 IST Report Abuse
தியாகு பஞ்சு விலை ஏறுது. ஏன் ஏறுது? உற்பத்தி குறைவு. ஏன் உற்பத்தி குறைவு? பருத்தி விளைவிக்க ஒரு விவசாயியும் ஆர்வம் காட்டுவதியிலை. ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? கஷ்டப்பட்டு விளைவிக்கும் பருத்திக்கு விவசாயிக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. ஏன் கிடைப்பதில்லை? இடை தரகர்கள் அவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள். ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? மோடிஜி கொண்டு வந்த விவசாய சீர்திருத்த சட்டங்களை தேச விரோதிகள் எதிர்ப்பதால். ஏன் தேச விரோதிகள் எதிர்க்கிறார்கள்? இடை தரகர்களிடம் இருந்து கமிஷன் கிடைப்பதால். இவ்வளவுதான் விஷயம். விவசாயத்தில் ஏன் இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை என்று இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை. இன்னமும் உங்களுக்கு புரியலைனா உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பதிவு. படித்துவிட்டு புரியாதமாதிரி நடிக்காமல், இச் கொட்டி கடந்து போகாமல் நாலு பேருக்கு பகிரவும். உங்களுக்கு புண்ணியமா போகும். ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய தீவனங்கள் விலை, தொழிலாளர்கள் கூலி இவற்றை சேர்த்து 15 ரூபாய் செலவு ஆகும். விவசாயிக்கு ஒரு லிட்டருக்கு வெறும் 10 ரூபாய் லாபம் கிடைக்கும். (ஆவின் நிறுவனமும் தனியார் நிறுவனங்களும் ஒரு லிட்டரை விவசாயிகளிடம் இருந்து 25 ரூபாய்க்குத்தான் கொள்முதல் செய்வார்கள்). ஒரு மாடு வைத்திருந்து அது தினமும் 10 லிட்டர் கொடுத்தால் விவசாயிக்கு லாபம் ஒரு நாளைக்கு வெறும் 100 ரூபாய் (ஒரு மாட்டுக்கு). ஒரு விவசாயினால் 5 மாடுகளுக்கு மேல் தனி ஆளாய் பராமரிக்க இயலாது. அதனால் அவர் 5 மாடுகள் வைத்திருந்தால் அவரால் மாதம் 15000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க இயலாது. இடைவேளை இன்றி நாள் முழுதும் உழைக்க வேண்டும். ஒருவேளை மாடுகளுக்கு நோய் வந்துவிட்டால், மாடுகள் சராசரி பால் உற்பத்தி கொடுக்கவில்லை என்றால், விவசாயிக்கு உடம்பு முடியவில்லை என்றால் அதோகதிதான். மாடுகள் வளர்த்தால் யாரும் கல்யாணத்திற்கு பெண் கூட கொடுக்கமாட்டார்கள். ஆனால் ஜோசெப் விசய் அண்ணா, ஒன்றரை டன் சூர்யா அண்ணா, காஃபி வாங்கி குடிக்க சொல்லும் கார்த்தி அண்ணா இவர்கள் எவ்வளவு மொக்கையாக படம் கொடுத்தாலும் ஒரு படத்திற்கு அவர்களுக்கு சம்பளம் 80 கோடி ரூபாய். ஆனால், இவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் விவசாயம் செய்யுங்க, மாடு வளருங்க என்று பிலிம் காட்டுவார்கள். பிறகு யாருக்கு விவசாயத்தின் மீதும், மாடுகள் வளர்ப்பதின் மீதும் ஆர்வம் வரும்? சமூக ஊடகங்களில், பேஸ் புக்கில், சினிமாவில், வாட்ஸ் அப்பில் விவசாயம் செய்ய இயலாது. நிழல் வேறு நிஜம் வேறு. உண்மை பல நேரங்களில் கசக்கும். கொஞ்சம் யோசிங்க டுமிழர்களே. பின் குறிப்பு: நானும் விவசாயம் செய்து, மாடுகள் வளர்த்து நாசமா போன ஒரு அப்பாவி. மறக்காம இந்த பதிவை நாலு பேருக்கு பகிர்ந்து விவசாயியின் தலைவிதியை தமிழ் கூறும் நல் உலகுக்கு எடுத்துரைக்கவும்.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
28-மே-202211:50:22 IST Report Abuse
K.n. Dhasarathan பியூஸ் கோயல் இன்னும் அறிவிப்பு அமைச்சராக இல்லாமல் ஜவுளித்துறை சீராக்க பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு உடனே தடை விதிக்க வேண்டும், அமைச்சர் என்றால் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா ? அந்த துறை செயலர்கள் என்னதான் செய்கிறார்கள் ? வெங்காயத்தாள் ஆட்சி கவிழ்ந்தது நினைவில்லையோ ? பட்டால்தான் தெரியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X