சிறு, குறு நிறுவனங்களுக்கு பிரகாசமான வாய்ப்பு!

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ராணுவ தயாரிப்பு துறை ஆதரவுடன், 'டிட்கோ' எனப்படும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் லகு உத்யோக் பாரதியுடன் இணைந்து 'ஸ்வதந்த்ரா' அறக்கட்டளை நடத்தும், முதல் தனியார் ராணுவ கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வருகிறது.சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த கண்காட்சியின் இரண்டாம் நாளான

ராணுவ தயாரிப்பு துறை ஆதரவுடன், 'டிட்கோ' எனப்படும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் லகு உத்யோக் பாரதியுடன் இணைந்து 'ஸ்வதந்த்ரா' அறக்கட்டளை நடத்தும், முதல் தனியார் ராணுவ கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வருகிறது.



latest tamil news




சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று, தொழில்சார் அறிஞர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும், வர்த்தகர்கள் இடையிலான சந்திப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த கண்காட்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


துப்பாக்கி பாகங்கள்



மத்திய அரசின் நவீன ரக ஆயுதங்கள், உபகரணங்கள் தொழிற்சாலை மூலம், உதிரி பாகங்கள் தயாரிப்பதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொழிற்சாலையின் இணை மேலாளர் கிருஷ்ணசாமி, இணை பொது மேலாளர் விஜய் கணேசன் ஆகியோர் கூறியதாவது:

நாட்டின் பாதுகாப்பிற்கான நவீன ரக ஆயுதங்கள், உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் நம் நாட்டில், எட்டு இடங்களில் உள்ளன. அதில், பிரதானமானது திருச்சி தொழிற்சாலை.
அங்கு, 5.5 ரைபிள், அசால்ட் ரைபிள், கிரானைட் லாஞ்சர் உள்ளிட்ட பல நவீன ரக துப்பாக்கிகள், உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை முப்படைகள் மட்டுமின்றி, மத்திய, மாநில காவல் துறைக்கும் வழங்கப்படுகின்றன.
அடுத்த கட்டமாக, கடற்படைக்காக, 'ரிமோட்' வாயிலாக இயங்கும் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. ஒரு துப்பாக்கியில், 120 உதிரிபாகங்கள் உள்ளன. அவை அனைத்தும், இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அதனை தயாரிக்க விரும்பும் தொழில் முனைவோர் வரவேற்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news




ராணுவத்துறைக்கு, 'டேங்க்' எனப்படும் கவச வாகனங்கள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நம் நாட்டில், ஐந்து இடங்களில் உள்ளன. இதில், சென்னை, ஆவடியில் கனரக வாகனங்கள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

அதில், தொழில்முனைவோர் பங்கேற்கும் வாய்ப்பு குறித்து, இணைப் பொது மேலாளர் கதிர்வேல் கூறியதாவது:
ஆவடி டேங்க் பேக்டரியில், ஆண்டிற்கு 120 புதிய போர் வாகனங்களை தயாரிக்கிறோம். மேலும், 120 வாகனங்களுக்கான உபகரணங்கள், இயந்திரங்கள் தயாரிக்கிறோம்.இந்த கனரக வாகனங்களில், ௩,௦௦௦த்திற்கும் மேற்பட்ட பிரதான தளவாடப் பொருட்கள், 40 ஆயிரம் உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகன தயாரிப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், தரத்தில் இம்மி அளவு கூட குறை இருக்க கூடாது, உரிய நேரத்தில் உதிரிபாகங்களை, 'சப்ளை' செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்களின் கட்டளை.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-மே-202213:30:59 IST Report Abuse
Balaji Radhakrishnan நமது ஆயுத தொழில் AI, Laser, Robotic தொழிட்நுட்பத்தை புகுத்த வேண்டும். அதும்மட்டுமில்லாமல் நமது எல்லையில் இந்த மூன்றையும் உபயோகித்து பயங்கரவாதிகள் அல்லது பிற நாட்டு ராணுவத்தை, ஏவுகணைகளை தடுக்க முடியும்.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-மே-202212:57:09 IST Report Abuse
Sriram V Everywhere corruption under vidiyal Arasu
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
28-மே-202209:22:47 IST Report Abuse
ganesha பயம்மா இருக்கீ. மோடி நல்லது தான் பண்ணறார். ஆனாலும் இங்க தமிழ்நாட்டுல இருக்கற சில தேசவிரோத சக்திகள் கட்சிகள், நக்சல் எண்ணம் கொண்டவர்கள் என்ன பண்ணப்போறார்களோ? அந்த ஆண்டவன் தான் தமிழ்நாட்டை காப்பாத்தணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X