பல்லடம்: முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மஞ்சப்பை திட்டம் ரேஷன் கடைகள் மூலம் செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், 'மீண்டும் மஞ்சப்பை' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். பிளாஸ்டிக்கை தவிர்த்து, துணிப்பைகளின் உபயோகத்தை பொதுமக்களிடம் மீண்டும் கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன், முதல்வர் அறிவித்த 'மஞ்சள் பை' திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் துறையினர் கூறியதாவது:பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து மறையவில்லை. துணி பைகளின் பயன்பாடு அதிகரித்தால், பிளாஸ்டிக் பயன்பாடு தானாகவே குறைந்து விடும்.இதற்கு, தமிழக அரசு அறிவித்த 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு இலவசமாக துணிப்பை வினியோகிப்பதன் மூலம் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும்.மேலும், துணி உற்பத்தி சார்ந்த நெசவாளர்கள், துணி உற்பத்தியாளர்கள், தொழிலாளர் உள்ளிட்டோர் இதன் மூலம் பயன்பெறுவர். இதனை செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE