தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம்

Updated : மே 29, 2022 | Added : மே 28, 2022 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று( மே 28) முதல் ஜூன் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெப்பச்சலனம் காரணமாக இன்றும்(மே 28) நாளையும்( மே 29) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
தமிழகம், மழை, சென்னை வானிலை, வானிலை மையம், சென்னை வானிலை மையம், புதுச்சேரி, மீனவர்கள்,

சென்னை: தமிழகத்தில் இன்று( மே 28) முதல் ஜூன் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெப்பச்சலனம் காரணமாக இன்றும்(மே 28) நாளையும்( மே 29) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



மே 30 , 31 மற்றும் ஜூன் 1

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news




சென்னையை பொறுத்தவரை


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39- 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.



மீனவர்களுக்கான எச்சரிக்கை


இன்று இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், நாளை மற்றும் நாளை மறுநாள் லட்சதீவு, தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X