கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஓ நியமிக்க முடிவு

Added : மே 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: கல்வி தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போட்டி தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைக்க பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி

சென்னை: கல்வி தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போட்டி தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைக்க பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் வாய்ந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளை கையாளும் திறன், நிர்வாகத்திறன், பத்திரிகை துறை அல்லது ஊடகவியல் பட்டப்படிப்பு முடித்த 5 ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் மிக்க நபர்கள் சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Oru Indiyan - Chennai,இந்தியா
28-மே-202216:56:09 IST Report Abuse
Oru Indiyan சூரிய தொலைகாட்சிலிருந்து யாராவது தேர்ந்தெடுத்து விடுவார்கள். கல்வி சேனலும் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்து விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X