மஹாத்மா காந்தி கனவு கண்ட இந்தியாவை உருவாக்க முயற்சி: பிரதமர்

Updated : மே 29, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
ராஜ்கோட்: மஹாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க கடந்த 8 ஆண்டுகளில் முயற்சிகளை மேற்கொண்டோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைக்கப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாட்டிற்கு சேவை செய்ய துவங்கி 8
india, primeminister, modi, narendramodi, mahatmagandhi, bapu, sardar, patel,nation, gujarat, இந்தியா, பிரதமர், மோடி, நரேந்திர மோடி, பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா, குஜராத், மகாத்மா காந்தி, மஹாத்மா காந்தி, மகாத்மா, மஹாத்மா, காந்தி, படேல், சர்தார் வல்லபாய் படேல், ஏழைகள்,  தேசம், நாடு,

ராஜ்கோட்: மஹாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க கடந்த 8 ஆண்டுகளில் முயற்சிகளை மேற்கொண்டோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைக்கப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாட்டிற்கு சேவை செய்ய துவங்கி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டுகளில், ஏழைகளுக்கு சேவை, சிறந்த நிர்வாகம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் 100 சதவீதம் மக்களை சென்றடைவதற்கு அரசு ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறது. அனைத்து குடிமக்களுக்கும் அனைத்து வசதிகளை அளிக்கும் போது, பாகுபாடு முடிவுக்கு வருவதுடன், ஊழலுக்கான வாய்ப்பு குறையும்.

கடந்த 8 ஆண்டுகளில், மஹாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டோம். ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை மஹாத்மா காந்தி விரும்பினார். அங்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஒரு வாழ்க்கை முறையாகும்.


latest tamil news



கோவிட் பெருந்தொற்று துவங்கியதும், ஏழைகள் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டனர். மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்குவதற்கான இடங்களை நாங்கள் அமைத்தோம். பெண்கள் நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ள, ஜன்தன் கணக்குகளுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது. விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கும் பணம் நேரடியாக செலுத்தப்பட்டது. பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் அளிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்கான சவால்கள் அதிகரித்த போது, ஏழைகள் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்வதற்கு எளிதாக வழிவகை செய்யப்பட்டது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசி உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மே-202209:23:54 IST Report Abuse
பேசும் தமிழன் காந்தி கண்ட கனவு..... கான் கிராஸ் இல்லாத இந்தியா... அந்த நிலை கண்டிப்பாக வர வேண்டும்!!!!
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
28-மே-202223:10:27 IST Report Abuse
J. G. Muthuraj மஹாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கனவு கண்ட இந்தியாவை அவர்கள் ஏற்கனவே உருவாக்கிவிட்டார்கள்....அவர்கள் விட்டுச்சென்ற இந்தியாவை இன்றுள்ள தலைமுறை பராமரிப்பதும் செழிப்படையவும் செய்தல் அவசியம்....
Rate this:
Cancel
28-மே-202222:16:25 IST Report Abuse
அப்புசாமி காந்தி மாதிரியே இடுப்புத் துணி வரைக்கும் எல்லோரயும் உருவுரீங்க. கனவு பலிச்சுக்கிட்டே வருது.
Rate this:
sankar - Nellai,இந்தியா
30-மே-202220:10:43 IST Report Abuse
sankarஉன்போன்ற துன்மார்க்க சிந்தனையாளன் வாயில் இருந்து இதுபோன்ற வார்த்தை வராமல் இருந்தால்தான் வியப்பு - நன்கு குறைத்துக்கொள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X