தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து புதிய தாலுகா; கேரள அரசுக்கு வலுக்கும் கோரிக்கை

Added : மே 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை : கோவை மாவட்ட மேற்கு எல்லையில் கேரளாவின் பாலக்காடு மாவட்டமும், கிழக்கு எல்லையில் மண்ணார்காடு, பாலக்காடு, சித்துார் தாலுகாக்களும் உள்ளன. இந்த எல்லை வட்டங்கள் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளன. பல ஆண்டு கோரிக்கைகளுக்கு பின், மண்ணார்காடு வட்டத்தை பிரித்து, ஆனைகட்டிக்கு மேற்கே அட்டப்பாடி வட்டம், கேரள அரசால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்டது.அதேபோல்,
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து புதிய தாலுகா;  கேரள அரசுக்கு வலுக்கும் கோரிக்கை



கோவை : கோவை மாவட்ட மேற்கு எல்லையில் கேரளாவின் பாலக்காடு மாவட்டமும், கிழக்கு எல்லையில் மண்ணார்காடு, பாலக்காடு, சித்துார் தாலுகாக்களும் உள்ளன. இந்த எல்லை வட்டங்கள் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளன. பல ஆண்டு கோரிக்கைகளுக்கு பின், மண்ணார்காடு வட்டத்தை பிரித்து, ஆனைகட்டிக்கு மேற்கே அட்டப்பாடி வட்டம், கேரள அரசால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்டது.

அதேபோல், மொழி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் புதுச்சேரி (வாளையார்), வடகரப்பதி (வேலந்தாவளம்), எருத்தேன்பதி, கொழிஞ்சாம்பாறை, பெருமாட்டி (மீனாட்சிபுரம்), முதலைமடை ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைத்து புதிய தாலுகா உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள தமிழ் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் பேச்சிமுத்து கூறியதாவது:தமிழக எல்லை பகுதிகளாகவும், கேரளாவில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாவும் இருப்பதால், புதுச்சேரி, வடகரப்பதி உட்பட இடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பாசன வசதிகள் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில்லை. சுமார் 2 லட்சம் தமிழர்கள் இப்பகுதிகளில் வசிக்கின்றனர்.

இவர்களின் வாழ்கை தரம் மேம்பட கொழிஞ்சாம்பாறையை மையமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட வேண்டும். நில அளவைக்கு போதிய சர்வே அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜனை சந்தித்து மனு அளித்துள்ளோம். வருவாய் துறையினரும், பாலக்காடு கலெக்டரும் உடனே அறிக்கை தர அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
29-மே-202211:05:10 IST Report Abuse
pradeesh parthasarathy இந்த பகுதி மக்கள் தென்னை மரத்திலிருந்து சட்டபூர்வமாக கள் இறக்கி மற்ற பகுதி மக்களை விட நல்ல சம்பாதிக்கிறார்கள்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
29-மே-202209:26:53 IST Report Abuse
sankar இதுமாதிரி தேவை இல்லாத திராவிட வெங்காய சில்மிஷங்கள் வேண்டாம் நண்பர்களே
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
29-மே-202200:18:34 IST Report Abuse
Matt P மக்கள் எல்லோரும் கலந்து வாழ்வது தான் சரியாக இருக்கும். எல்லோரும் இந்தியர்கள் தானே. கலந்து வாழ வேண்டும் என்பதால் தானே சமத்துவபுரம் கொண்டு வந்தார்கள். ஒரு பிரிவாக வாழும்போது அந்த பகுதிக்கு தொண்டு தேவையில்லை என்று குறுகிய உள்ளம் படைத்த அரசியல்வாதிகள் குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X