ஐந்து மாதங்களில் 3,915 திட்டங்கள் பதிவு| Dinamalar

ஐந்து மாதங்களில் 3,915 திட்டங்கள் பதிவு

Added : மே 28, 2022 | |
சென்னை: வீடு, மனைப்பிரிவு தொடர்பாக, ஐந்து மாதங்களில், 3,915 திட்ட ஆவணங்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை விசாரிக்க, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை 2017ல் துவக்கப்பட்டன. எட்டு வீடு, மனைகளுக்கு மேற்பட்ட அனைத்து குடியிருப்பு திட்டங்களையும், இந்த ஆணையத்தில் பதிவு


சென்னை: வீடு, மனைப்பிரிவு தொடர்பாக, ஐந்து மாதங்களில், 3,915 திட்ட ஆவணங்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை விசாரிக்க, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை 2017ல் துவக்கப்பட்டன.



எட்டு வீடு, மனைகளுக்கு மேற்பட்ட அனைத்து குடியிருப்பு திட்டங்களையும், இந்த ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்.இதில், புதிய கட்டுமான திட்டங்கள் மட்டுமே தொடர்ந்து பதிவாகி வந்தது. மனைப்பிரிவு திட்டங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பதிவு செய்யாமல் விற்பனை செய்து வந்தன.இந்நிலையில், ரியல் எஸ்டேட் சட்டப்படி, பதிவு செய்யாத மனைகளின் விற்பனையை பதிவு செய்ய பதிவுத்துறை சில மாதங்களுக்கு முன் தடை விதித்தது.



இதையடுத்து வேறு வழியின்றி, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மனைப்பிரிவு திட்டங்கள் பதிவுக்கு வந்தன.பதிவுகள் அதிகம்இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: பதிவுத்துறையின் கட்டுப்பாடு காரணமாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தங்கள் மனை திட்டங்களை பதிவு செய்யக்கோரி ஆணையத்தில் விண்ணப்பித்து வருகின்றன. இதனால், நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.



இதில், தற்போது வரை, 3,915 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த, 2020ல் 755 திட்டங்கள்; 2021ல் 972 திட்டங்கள் மட்டுமே பதிவாகி இருந்தன. தற்போது வந்துள்ள விண்ணப்பங்களில், 60 சதவீத விண்ணப்பங்கள் மனைப்பிரிவு சம்பந்தப்பட்டவை. அதிலும், 30 சதவீத விண்ணப்பங்கள் வரன்முறை செய்யப்பட்ட மனைப்பிரிவுகள் தொடர்பானவை. பணியாளர் பற்றாக்குறைசராசரியாக, 3,000 விண்ணப்பங்கள் வரும் சமயத்தில், தற்போது, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் ரியல் எஸ்டேட் ஆணைய பணியாளர்கள் திணறி வருகின்றனர்.



முறையாக முழுநேர பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், தற்காலிக ஏற்பாடாக வேறு துறைகளில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தான் பரிசீலனை பணியில் உள்ளனர்.இவர்களால் முழுமையாக செயல்பட முடியாததால், விண்ணப்பங்கள் பதிவுக்காக காத்திருக்கும் காலம் அதிகமாகி, வீடு, மனை விற்பனை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு தலையிட்டு, கூடுதல் பணியாளர்களை தற்காலிக அடிப்படையிலாவது அனுப்பி, நிலுவை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X