கரும்புக்கான கடன் வரம்பு அதிகரிப்பு ஆறுதல் தருகிறது!

Added : மே 28, 2022 | |
Advertisement
தஞ்சாவூர் மாவட்டம், தோழகிரிப்படியை சேர்ந்த கரும்பு விவசாயி கோவிந்தராஜ்: 'கிசான் கார்டு' வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, நெல் உள்ளிட்ட எந்தப் பயிராக இருந்தாலும், அதிகபட்சமாக, 1.60 லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டும் என்பது, மத்திய அரசின் விதிமுறை. இது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்துக்கும் பொருந்தும். ஆனால், நெல்லுக்கு


தஞ்சாவூர் மாவட்டம், தோழகிரிப்படியை சேர்ந்த கரும்பு விவசாயி கோவிந்தராஜ்:

'கிசான் கார்டு' வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, நெல் உள்ளிட்ட எந்தப் பயிராக இருந்தாலும், அதிகபட்சமாக, 1.60 லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டும் என்பது, மத்திய அரசின் விதிமுறை. இது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்துக்கும் பொருந்தும்.



ஆனால், நெல்லுக்கு அதிகபட்சம், 1 லட்சம் ரூபாய் வரை தான் கொடுக்கப் படுகிறது.கரும்புக்கான கடன் என்பது, சர்க்கரை ஆலையும், விவசாயியும் ஒப்பந்தம் செய்து கடன் வாங்குவதாலும், கரும்பு அறுவடை செய்ததும் அதற்குரிய பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாலும், ஒரு விவசாயிக்கு அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும் என்று, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இதை பெரும்பாலான வங்கிகள் கடைப்பிடிப்பதே இல்லை. 1.60 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வேண்டும் எனில், சொத்துப் பத்திரத்தை பிணையமாக கேட்கின்றனர். ஒரு சில கூட்டுறவு வங்கிகள், விவசாயிகளின் நலன் கருதி, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில், கடன் தொகையை பகிர்ந்து வழங்குகின்றன.



தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இதே நிலை தான். கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சம், 1.60 லட்சம் ரூபாய் தான் கடன் வழங்கப்படும் என்பது விவசாயிகளை வஞ்சிக்க கூடியதாக இருந்தது. காரணம், கரும்பு உற்பத்தி செய்ய ஏக்கருக்கு, 75 ஆயிரம் முதல், 90 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், அரசு கணக்குப்படி, மூன்று ஆண்டுகளாக, 50 ஆயிரம் ரூபாய் தான் உற்பத்தி செலவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.



இந்தக் கணக்குப்படி பார்த்தாலும், 10 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிக்கு, 5 லட்சம் ரூபாய் கடன் தேவைப்படும். ஆனால், 1.60 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போதைய தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் கரும்பு கடனுக்கான உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்தியிருப்பது கரும்பு விவசாயிகளுக்கு, பெரிதும் ஆறுதல் அளிப்பதாகும். அதேசமயம், இந்த அறிவிப்பை கூட்டுறவு வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டும். அதை, தமிழக அரசு முறையாக கண்காணிக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X