கோவில் சொத்துக்கள் மீட்பில் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
ஹிந்து சமய அறநிலையத் துறை சமீபத்தில் வெளியிட்ட, 'ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள்' என்ற புத்தகத்தில், உண்மையான தகவல்கள் இடம் பெறவில்லை; பல உண்மைகளை மறைத்து விட்டதாக, ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் குற்றம் சாட்டுகிறார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:'அறநிலையத் துறையால் மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள், 2021 - 2022' என்ற ஆவணம்


ஹிந்து சமய அறநிலையத் துறை சமீபத்தில் வெளியிட்ட, 'ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள்' என்ற புத்தகத்தில், உண்மையான தகவல்கள் இடம் பெறவில்லை; பல உண்மைகளை மறைத்து விட்டதாக, ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் குற்றம் சாட்டுகிறார்.latest tamil newsநம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:'அறநிலையத் துறையால் மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள், 2021 - 2022' என்ற ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வழங்கிய முன்னுரையில், 'இந்த ஆவணம் கோவில் சொத்துக்களை அதற்கே சொந்தமாக்கி எழுதப்பட்ட ஆவணம்' என சொல்கிறார். இது, வரவேற்க வேண்டிய கருத்து. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்போருக்கே தாரைவார்க்க எடுத்த முடிவுக்கு எதிரான, கோவில் தர்மத்திற்கு உறுதுணையான கருத்தை முதல்வர் தெரிவித்து உள்ளது, உண்மையிலேயே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

அதே சமயம் என்னைப் போன்ற, கோவில் நிர்வாகத்தில் இந்தத் துறை செய்து வரும் அநியாயங்களை, 10- - 12 ஆண்டுகளாக கவனித்து வரும் சிலருக்கு, இந்த நிலம் மீட்பு ஆவணங்கள் குறித்து சந்தேகங்கள் எழுகின்றன. முதல்வரிடம், உண்மைகளை மறைத்துள்ளனர்; பல விஷயங்களை, ஜோடனை செய்து மறைத்துள்ளனர். கடந்த 1986ல் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், 5.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், கோவில் கட்டளை நிலங்களாக காண்பிக்கப்படுகின்றன.


latest tamil news


அவை தற்போது, 4.78 லட்சம் ஏக்கர்களாக குறைந்துள்ளன. 47 ஆயிரம் ஏக்கர் மாயமான விஷயம் குறித்து, அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கில், துறை விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது; இன்று வரை விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், கூசாமல் ஜோடனை ஆவணம் வெளியிடுகின்றனர். இந்த ஆவணத்தின் 10ம் பக்கத்தில், 4.78 லட்சம் ஏக்கர்களில், 3.43 லட்சம் ஏக்கர்களுக்கு தான் சரியான ஆவணங்கள் உள்ளதாக ஒத்துக் கொள்கின்றனர். 60 - -70 ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தை தன் கையில் வைத்துள்ள அரசு, எப்படி 1.35 லட்சம் ஏக்கர்களுக்கு உரிய ஆவணங்களை தொலைத்தது?


இது எவ்வளவு பெரிய மோசடி?

கடந்த 2012ல் கோவில்கள், திருமடங்கள், கட்டளைகளுக்கு, 4.78 ஏக்கர் விவசாய நிலங்கள், 18.47 லட்சம் சதுர அடி கட்டடங்கள், 29 கோடியே 15 லட்சம் சதுர அடி மனைகள் இருந்தன. இவ்வளவு துல்லியமாக நில விபரங்களைத் தந்த அறநிலையத் துறை, தற்போது 1.35 லட்சம் ஏக்கர்களுக்கு ஆவணங்கள் இல்லை என்று கூறுவது, அதிர்ச்சி அளிக்கிறது.

ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பெயரில் மாற்றுவது மிகச் சுலபம் என்று, இந்தத் துறைக்கு தெரியாதா? ஆறு மாதங்களுக்கு மேல் குத்தகையோ, வாடகையோ தரவில்லை என்றாலும், முறையான குத்தகை, வாடகை பத்திரம் இல்லாமல் இருந்தாலும், அடாவடியாக ஆக்கிரமித்து இருந்தாலும், அவை எல்லாம் ஆக்கிரமிப்பு நிலங்களாக, மனைகளாக, கட்டடங்களாக கருத வேண்டும். அப்படிப் பார்த்தால் குறைந்தபட்சம் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களும், 5 கோடி சதுர அடி மனைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இது தான் உண்மை.
உதாரணம்


சேலம் நகர் நடுவில், 113 ஏக்கர் நிலங்கள், சுகவனேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தம்; அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆனால், கோவில் ஆவணங்களில் இவை இன்றும் விவசாய நிலங்களாக, 31 குத்தகைதாரர்கள் ஆண்டுக்கு, 11 ஆயிரம் ரூபாய் அளிப்பதாக, கணக்கு காட்டுகின்றனர். இந்த நிலங்களை, 50 லட்சம் சதுர அடி மனைகளாக தான் ஆவணங்களில் காட்டப்பட வேண்டும். காரணம், அந்த நிலங்களில் வீடுகள், பள்ளிக்கூடங்கள், கடைகள், கல்லுாரிகள், மாநகராட்சி மயானம், சர்ச் எல்லாம் வந்து விட்டன. இன்னமும் விவசாய நிலம், ஆண்டு வாடகை 11 ஆயிரம் ரூபாய் என்று சொல்வது, எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை? ஒரு சதுர அடிக்கு 5 ரூபாய் மாத வாடகை என்று வைத்துக் கொண்டாலே, ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் அந்த சிவன் கோவிலுக்கு வர வேண்டுமே?மற்றொரு ஏமாற்று வேலை


இந்த ஆவணத்தில், 2,56௭ கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் 30 -- 40 ஆண்டுகளாக, இந்த நிலங்களில் இருந்து சிறிதும் வாடகை வரவில்லை. அந்த தொகை, நிலங்களின் மதிப்பை விட அதிகமாக இருக்கும். அது குறித்த அனைத்து விபரங்களும் இந்தத் துறையிடம் உள்ளன. ஆனால், இந்த ஆவணத்தில் அதை பற்றி மூச்சு விடவில்லை. இது, ஏமாற்று வேலை மட்டும் அல்ல. இது ஊழலின் ஊற்றுக்கண்.
சட்டத்திருத்தம்


தற்போதைய தி.மு.க., அரசு, கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு, யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, ஆறு மாதங்களில் எத்தனை கோவில் செயல் அலுவலர், கோவில் நில ஆக்கிரமிப்பாளர் மீது வழக்கு போட்டுள்ளனர்?
அரசே ஆக்கிரமிப்பாளர்
திருச்சி, சேலம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, மதுரை, நாகப்பட்டினம் இணை ஆணையர் அலுவலகங்கள், கோவில் நிலங்களில் தான் இயங்குகின்றன. இவற்றுக்கு வாடகை தருவதில்லை. மேலும் கோவில் பணத்தை எடுத்து, துறை அலுவலகங்களை கட்டிஉள்ளனர். இந்த தவறுகளை செய்த அறநிலையத் துறை அதிகாரிகள் மீது, அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுப்பாரா?


கோவில் பணத்தை வட்டியுடன் மீட்டு தருவாரா?

சென்னை மண்டல ஹிந்து சமய அறநிலையத் துறை தணிக்கை அலுவலகம், ஆழ்வார்பேட்டையில் ஒன்பது மடங்களுக்குச் சொந்தமான தெய்வீக பேரவையில் இயங்குகிறது; இதற்கும் வாடகை தருவதில்லை. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் தான் நடைபெற்று வருகிறது; இதற்கும் வாடகை கொடுப்பதில்லை. திருவண்ணாமலை கோவில் நிலத்தில், அவ்வை பள்ளிக்கூடம் இயங்குகிறது; வாடகை தருவதில்லை. சென்னையில் கபாலீஸ்வரருக்குச் சொந்தமான, கிரீன்வேஸ் சாலையில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் தரச் சொல்கிறது, இந்தத் துறை. அதே சமயம், மயிலாப்பூர் ரானடே நுாலகத்திற்கு, சந்தை வாடகை கணக்கிட்டு கட்டடத்திற்கு, 'சீல்' வைக்கிறது.


சென்னை கல்வி நிலையங்கள்


சென்னையில் பார்த்தசாரதி கோவில், புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோவில், முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோவில், ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோவில்,சவுமிய தாமோதர பெருமாள் கோவில், அமைந்தகரை திருவீதி அம்மன் கோவில்.மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதி சென்னகேசவபெருமாள் கோவில், கொளத்துார் சோமநாதஸ்வாமி கோவில் ஆகியவற்றின் லட்சக்கணக்கான சதுர அடி மனைகள், பள்ளிக்கூடங்களுக்கு, கல்லுாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இவற்றில் இருந்து முறையான வாடகையைப் பெற, அறநிலையத் துறை 30 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறநிலையத் துறைக்கு சம்பந்தம் இல்லாத, ஒரு புகழ்பெற்ற தணிக்கை நிறுவனம் வாயிலாக, கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விசாரணைக்கு, முதல்வர் உத்தரவிட வேண்டும். அப்போது தான் அறநிலையத் துறை எவ்வளவு அலட்சியம் காட்டியுள்ளது; எவ்வளவு ஊழல் புரிந்துள்ளது; எவ்வளவு விஷயங்களை முதல்வரிடமே மறைக்கிறது என்பது தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் --


Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TRUBOAT - Chennai,இந்தியா
29-மே-202213:09:05 IST Report Abuse
TRUBOAT இவ்வளவு கோவில் இடங்களை மீட்டு பல சீர்திருத்தங்களை செய்துகொண்டிருக்கும் இந்த ஆட்சியை குறை கூறுவதற்கு முன், உண்மையை தெரிந்து கொண்டு பேசுங்க எஜமான்....
Rate this:
29-மே-202214:35:52 IST Report Abuse
ஆரூர் ரங்யாரிடமிருந்து மீட்டது? எவ்வளவு ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு? ஆக்கிரமித்த குற்றவாளியின்🤔 விவரங்கள். இப்படி ஒன்றுமே ஊடகங்களில் கொடுக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் பயன்படுத்தியதற்கு என்ன வசூலிக்கப்பட்டது ? ஆக்கிரமித்த கொடியவர்கள் மீது ஏன் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவில்லை? அந்த விவரங்கள் எங்கே? ஆக ஒரு அங்குல இடம் கூட ஆக்கிரமிப்பு பிடிபடவில்லை🙃. மக்களை முட்டாள்களாக நினைத்து செய்யபட்ட ஏமாற்று 420 வேலை என்றே தோன்றுகிறது . அல்லது ஆக்கிரமித்த நபர்கள் ஆளுங் கட்சி ஆட்களை😄 கவனித்து விட்டார்கள் எனப் பொருள்...
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
29-மே-202212:21:57 IST Report Abuse
Nellai tamilan பொய் மட்டுமே மூலதனமாக கொண்டது தான் திராவிட மாடல். அவர்கள் உண்மை பேசினால் தான் உலக அதிசயம்.
Rate this:
Cancel
29-மே-202210:31:56 IST Report Abuse
உஷா வாசுதேவன் கண் கூடாக தெரிகிறது புறங்கை தேன் காற்றுள்ள பொது தேற்றிக் கொள்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X