ஆம் ஆத்மி வளர்ச்சிக்கு பா.ஜ., மேலிடம் கடிவாளம்! கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு

Updated : மே 29, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி : 'அடுத்து நடக்க உள்ள பல மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு மாற்றாக, பிரதான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது' என, பா.ஜ., ஆளும் மாநில தலைவர்களுக்கு, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லிக்கு பக்கத்து மாநிலமான பஞ்சாபில் சில மாதங்களுக்கு முன்
ஆம் ஆத்மி வளர்ச்சிக்கு பா.ஜ., மேலிடம் கடிவாளம்!   கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு

புதுடில்லி : 'அடுத்து நடக்க உள்ள பல மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு மாற்றாக, பிரதான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது' என, பா.ஜ., ஆளும் மாநில தலைவர்களுக்கு, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லிக்கு பக்கத்து மாநிலமான பஞ்சாபில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.




சட்டசபை தேர்தல்


அரவிந்த் கெஜ்ரிவால் கூட எதிர்பார்க்காத இந்த பிரமாண்ட வெற்றி, ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய வலிமையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. அதனால் ஆம் ஆத்மி அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு தயாராகி வருகிறது. பல மாநிலங்களில் வலுவாக காலுான்ற திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்திலும், அடுத்த ஆண்டு, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தல்களுக்கு ஆம் ஆத்மி வியூகம் வகுத்து செயல்பட துவங்கிஉள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அறிவித்த இலவசங்களை போல, வர உள்ள சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி அறிவிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு அடைந்து வரும் முன்னேற்றங்கள், அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முன்னிறுத்தி பா.ஜ., தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளது.கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தவிர்த்து, சட்டசபை தேர்தல் நடக்க உள்ள இதர முக்கிய மாநிலங்களில் பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் தான் நேரடி மோதல் உள்ளது.

இந்நிலையில், பலவீனமாக உள்ள காங்கிரசுக்கு மாற்றாக எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுப்பதை அனுமதிக்கக் கூடாது என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. இது சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களின் பா.ஜ., தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த உத்தரவை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஆம் ஆத்மி யின் முக்கிய தலைவர் முதல் அடிமட்ட தொண்டர் வரை பலரை பா.ஜ.,வுக்கு இழுத்து வரும் நடவடிக்கையில் பா.ஜ., தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன்படி கடந்த மாதம், ஹிமாச்சல பிரதேச ஆம் ஆத்மி தலைவர் அனுப் கேசரி பா.ஜ.,வில் இணைந்தார். இது ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.



500 பேர்




இதுபோல சமீபத்தில் குஜராத் ஆம் ஆத்மியில் பல பொறுப்புகளில் இருந்த 500 பேர், பா.ஜ.,வில் தஞ்சம் அடைந்துள்ளனர். உத்தரகண்டில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் தன் சகாக்களுடன் பா.ஜ.,வில் ஐக்கியமாகிஉள்ளார். டில்லியில் கெஜ்ரிவால் பாணி அரசின் தோல்வியை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பணியில் பா.ஜ., இறங்கியுள்ளது. டில்லி பா.ஜ.,வினர் வீடு வீடாகச் சென்று ஆம் ஆத்மிக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மியின் வளர்ச்சியை துவக்கத்திலேயே தடுக்கும் நோக்கில் பா.ஜ., வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
29-மே-202215:04:07 IST Report Abuse
Sampath Kumar முடிந்தால் தடுத்து பாருங்கள் அடுத்து ஆப்பு உங்க கட்சிக்குத்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X