நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு மாமல்லபுரத்தில் திருமணம்

Added : மே 28, 2022 | |
Advertisement
சென்னை : நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், ஜூன் 9ல், மாமல்லபுரத்தில் திருமணம் நடக்க உள்ளது.நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனும், அப்படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவும், ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். சமீபத்தில், இவர்கள் இணைந்து உருவாக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு மாமல்லபுரத்தில் திருமணம்


சென்னை : நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், ஜூன் 9ல், மாமல்லபுரத்தில் திருமணம் நடக்க உள்ளது.நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனும், அப்படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவும், ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். சமீபத்தில், இவர்கள் இணைந்து உருவாக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

தற்போது, ஆறு ஆண்டு காதலை திருமண பந்தத்தில் முடிக்க, இருவரும் முடிவு செய்துள்ளனர். அதையொட்டி, கோவில்களுக்கு இருவரும் சேர்ந்து சென்ற படங்களை, அதிகம் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில், விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோவிலுக்கு சென்ற நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பொங்கலிட்டு வழிபட்டனர்.இருவரும் திருப்பதியில் திருமணம் செய்வர் என எதிர்பார்த்த வேளையில், ஜூன் 9ல், சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் திருமணம் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். பின்னர், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X