ஹிந்தியை ஆர்வமுடன் கற்கும் ஜப்பான் மாணவர்கள்

Updated : மே 29, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி : ஆசிய நாடான ஜப்பானில் உள்ள உலகளாவிய இந்திய சர்வதேச பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டு மொழிகளில் ஹிந்தி மற்றும் பிரெஞ்சை அதிகம் தேர்வு செய்வதாக, பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார்.ஆச்சரியம்ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த உலகளாவிய பள்ளி அறக்கட்டளை சார்பில், ஆறு நாடுகளில், சர்வதேச பள்ளிகள் நடத்தப்படுகின்றன.மொத்தம், 16 இடங்களில் இந்தப்
ஹிந்தியை ஆர்வமுடன் கற்கும் ஜப்பான் மாணவர்கள்


புதுடில்லி : ஆசிய நாடான ஜப்பானில் உள்ள உலகளாவிய இந்திய சர்வதேச பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டு மொழிகளில் ஹிந்தி மற்றும் பிரெஞ்சை அதிகம் தேர்வு செய்வதாக, பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார்.



ஆச்சரியம்


ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த உலகளாவிய பள்ளி அறக்கட்டளை சார்பில், ஆறு நாடுகளில், சர்வதேச பள்ளிகள் நடத்தப்படுகின்றன.மொத்தம், 16 இடங்களில் இந்தப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்தப் பள்ளிகளை நடத்தும் உலகளாவிய பள்ளி அறக்கட்டளையின் துணை நிறுவனரும், தலைவருமான டெமுர்னிகர் கூறிஉள்ளதாவது:சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு ஜப்பானிய சிறுவன், அவருடன் ஹிந்தியில் பேசியுள்ளார். இது குறித்து மோடி ஆச்சரியப்பட்டார்.ஜப்பானின் டோக்கியோவில் நடத்தப்படும் உலகளாவிய இந்திய சர்வதேச பள்ளியில் அந்த மாணவர் படிக்கிறார். இந்தப் பள்ளியில், ஜப்பானிய மொழி, ஜப்பானிய கலாசாரத்துடன், பல்வேறு நாடுகளின் மொழிகள், கலாசாரங்களும் கற்றுத் தரப்படுகின்றன.

இதன் வாயிலாக, உலகளாவிய கலாசாரம் தொடர்பான அறிவு இந்த மாணவர்களுக்கு கிடைக்கிறது.இந்தப் பள்ளியில் படிக்கும் ஜப்பானியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், வெளிநாட்டு மொழியை கற்கின்றனர். விருப்ப அடிப்படையில் இது கற்பிக்கப்படுகின்றது. இதில் மாணவர்கள் அதிகம் தேர்வு செய்வது, ஹிந்தி மற்றும் பிரெஞ்ச் மொழியைத்தான்.இந்தப் பள்ளியில், 19 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள், ஹிந்தி, பிரெஞ்ச், ஜப்பானிய மொழி, சமஸ்கிருதம், மாண்டரின், அராபிக், தமிழ் உட்பட, 10 மொழிகளை கற்கின்றனர்.



கலாசாரம்


இந்தியப் பண்டிகைகள், கலாசாரம் தொடர்பாகவும் மாணவர்கள் கற்கின்றனர். ஹிந்தி தொடர்பான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.இந்த மாணவர்கள், தங்களுடைய தாய் மொழி, பாரம்பரிய கலாசாரத்துடன் மற்ற நாடுகளின் கலாசாரம், மொழிகளை கற்கும்போது, பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.உலகெங்கும், நம் நாட்டைச் சேர்ந்த, மூன்று கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பல்வேறு பல்கலைகளில் படித்து வருகின்றனர். அவர்கள் ஹிந்தியையே முதன்மை மொழியாக எடுத்துக் கொள்கின்றனர். இதன் வாயிலாக தங்கள் நாட்டு கலாசாரத்துடன் இணைந்திருப்பதாக இந்திய மாணவர்கள் உணர்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
31-மே-202217:16:12 IST Report Abuse
Vena Suna தமிழ் மொழியே தொன்மையானது...சிறந்தது...வடமொழிக்கு இணையானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X