எட்டு ஆண்டுகளில் பா.ஜ., செய்தது என்ன?

Updated : மே 28, 2022 | Added : மே 28, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
ராஜ்கோட் : ''கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் உட்பட அனைவரின் வாழ்க்கையை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அதைவிட, மக்கள் அவமானத்தில் தலையை குனிந்திருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்து, 26ம் தேதியுடன் எட்டு ஆண்டுகள்


ராஜ்கோட் : ''கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் உட்பட அனைவரின் வாழ்க்கையை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அதைவிட, மக்கள் அவமானத்தில் தலையை குனிந்திருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.latest tamil newsபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்து, 26ம் தேதியுடன் எட்டு ஆண்டுகள் முடிவடைந்தது. இதைக் கொண்டாடும் வகையில், பா.ஜ., சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் ராஜ்கோட் மாவட்டம் அட்கோட் நகரில், 200 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை நேற்று திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது :

கடந்த எட்டு ஆண்டுகளில் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்வதில் எந்த ஒரு சிறிய முயற்சியையும் கூட நாங்கள் விட்டு வைக்கவில்லை. அதுபோல, இந்த நாட்டின் எந்த ஒரு குடிமகனும் அவமானத்தில் தலைகுனியக் கூடிய சூழ்நிலையை, தனிப்பட்ட முறையில் நான் ஏற்படுத்தவில்லை.மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோர் விரும்பிய இந்தியாவை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மிகவும் நேர்மையுடன் மேற்கொண்டு வருகிறோம்.


latest tamil news

வலியுறுத்தல்ஏழை, எளிய மக்கள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் அதிகாரமிக்கவர்களாக இருக்கவும், துாய்மை, சுகாதாரம், பொருளாதார பிரச்னைகளுக்கு சுயசார்பின் மூலம் தீர்வு காணவும் மஹாத்மா காந்தி வலியுறுத்தினார். இதனடிப்படையிலேயே என்னுடைய அரசு செயல்பட்டு வருகிறது.

மூன்று கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு; பொது இடத்தை அசிங்கப்படுத்துவதை தடுக்க, 10 கோடி குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி; விறகுகள் எரிப்பதால் ஏற்படும் புகையில் இருந்து பாதுகாக்க, ஒன்பது கோடி பெண்களுக்கு இலவச சமையல் 'காஸ்' இணைப்பு என, பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.நாடு முழுதும், 2.5 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதி, ஆறு கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம்; மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, 50 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை என, எட்டு ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் ஏராளம்.

இவை வெறும் எண்ணிக்கையல்ல. ஏழை, எளிய மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்ததற்கான அத்தாட்சி.அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற கோஷத்துடன், நாட்டின் வளர்ச்சிப் பணிகள் புதிய பரிமாணத்தை கண்டன.கொரோனா பரவல் காலத்தின்போது, மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

பெண்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அனை வருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வழி செய்யப்பட்டது.கொரோனாவுக்கு எதிராக நம் நாட்டில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டபோது, அனைவருக்கும் இலவசமாக கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. ஏழ்மை, வறுமை என்பதை மற்றவர்களைப் போல நான் புத்தகம், 'டிவி' மூலம் தெரிந்து கொண்டவன் அல்ல; அதை அனுபவித்தவன்.
என் விருப்பம்
படேல் சமூகத்தினர் சார்பில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை எப்போதும் காலியாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதாவது நோய் ஏற்படாத வகையில் மக்கள் ஆரோக்கியமாக வாழக்கூடிய வகையில் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதன்பின், காந்தி நகரில் நடந்த கூட்டுறவு சங்க கருத்தரங்கிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
29-மே-202216:43:18 IST Report Abuse
Venugopal S கடந்த எட்டு வருடங்களில் பாஜக நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்தது என்று தெரியாமல் தான் நாங்களும் இதே கேள்வியை உங்களிடம் கேட்கிறோம்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
29-மே-202216:23:04 IST Report Abuse
Suri ,,,,,
Rate this:
raja - Cotonou,பெனின்
30-மே-202210:45:14 IST Report Abuse
rajaஎப்படி முட்டு கொடுக்கிறானுவோ பாருங்க...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
29-மே-202214:53:27 IST Report Abuse
Sampath Kumar ,,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X