சென்னை : 'அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆய்வு மைய இயக்குனர்செந்தாமரை கண்ணன் அறிவிப்பு:தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் ஜூன் 1 வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில், சேலம் மாவட்டம், வீரகானுார்; கடலுார் மாவட்டம், வேப்பூர் பகுதியில், தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், வால்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் தலா 4 செ.மீ., மழை பெய்தது.மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழி; அரியலுார் மாவட்டம் செந்துறை; கரூர்; கடலுார் மாவட்டம் தொழுதுாரில் 3 செ.மீ., மழை பெய்தது.பெரம்பலுார் மாவட்டம் வி.களத்துார்;திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்துார்; விழுப்புரம் மாவட்டம் வளத்தி; புதுக்கோட்டை மாவட்டம்காரையூர்; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தலா 3 செ.மீ., மழை பதிவானது.இன்றும், நாளையும் லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல், தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12 இடங்களில் வெயில் சதம்
அக்னி நட்சத்திர காலம், நேற்று நிறைவடைந்தாலும், வெயில் நேற்று 12 இடங்களில் சதத்தை தாண்டியது.சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலுார், காரைக்கால், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி.வேலுார் ஆகிய இடங்களில், வெயில் 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை நுங்கம்பாக்கத்தில், 39.8 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE